வீடியோ… இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்… முகமது ஷமியிடம் “பீஸ்ட்” பட அப்டேட் கேட்ட ரசிகர்கள் !!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொய்ன் அலியிடம் நடிகர் அஜித் ரசிகர்கள் “வலிமை” பட அப்டேட் கேட்டிருந்த நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் இந்திய வீரர் முகமது ஷமியிடம் “பீஸ்ட்” பட அப்டேட் கேட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டியிலும் வெறும் மூன்றே நாளில் போட்டியை முடித்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதால் முதல் போட்டியை விட இந்த போட்டி ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெற்றது.

விராட் கோலி பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த போது “RCB”, “RCB” என கோசமிட்ட ரசிகர்கள், மற்றொரு இந்திய வீரரான முகமது ஷமியிடம், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள “பீஸ்ட்” பட அப்டேட்டை கேட்டுள்ளனர்.

வீடியோ;

முகமது ஷமி பவுண்டரி லைனில் பீல்டிங்கில் நின்றிருந்த போது, ரசிகர்கள் சிலர் முகமது ஷமியிடம், “ஷமி பாய்… ஷமி பாய் பீஸ்ட் அப்டேட்” என தொடர்ந்து கத்தி கொண்டே இருந்தனர். முகமது ஷமி இதனை பெரிதாக கண்டுகொள்ளாவிட்டாலும், ரசிகர்கள் ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த வருட இறுதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் போது, பீல்டிங் செய்துகொண்டிருந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலியிடம், அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டது வைரலானது. இதேபோல், இந்திய அணி வீரர் அஷ்வினிடமும் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.