தோனியை வேண்டுமென்றே அவமதிக்கிறார் சச்சின்? இது முதல் முறையல்ல..

தோனியை சச்சின் டெண்டுல்கர் வேன்றுமென்றே அவமதிக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கேள்விகள் எழுப்புகின்றனர்.

2019 ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் மே 30ஆம் தேதி துவங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இறுதியாக, ஆட்டம் சமன், சூப்பர் ஓவர் சமன் என்றிருந்த நிலையில் பவுண்டரிகள் கணக்கின் படி, அதிக பவுண்டரிகள் (26) அடித்திருந்த இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

LONDON, ENGLAND – JULY 14: England Captain Eoin Morgan lifts the World Cup with the England team after victory for England during the Final of the ICC Cricket World Cup 2019 between New Zealand and England at Lord’s Cricket Ground on July 14, 2019 in London, England. (Photo by Michael Steele/Getty Images)

அதன்பிறகு, கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் உலகக்கோப்பையில் சிறந்த 11 வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சிறந்த 11 வீரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதில் இந்திய அணிக்கு நடுவரிசையில் நன்றாக ஆடிய முன்னாள் கேப்டன் தோனி பெயர் இடம்பெறவில்லை. ஆனால், ரோஹித் சர்மா, விராத் கோலி, ஹார்டிக் பாண்டியா, பும்ராஹ் மற்றும் கடைசி 2 போட்டிகளில் மற்றும் ஆடிய ஜடேஜா பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், ரசிகர்கள் பலர் சச்சின் டெண்டுல்கர் வேண்டுமென்றே தோனியை அவமதிப்பதற்க்காக இப்படி செய்கிறாரா? தோனியின் பங்களிப்பை அவர் பார்க்கவில்லையா? விராத் கோலியை விட ரூட் நன்றாக செயல்பட்டார். ஆனால் கோலியை மட்டும் எடுத்ததன் காரணம் என்ன? என பல கேள்விகளை முன்வைத்தனர்.

சச்சின் டெண்டுல்கரின் சிறந்த உலகக்கோப்பை அணி

கேன் வில்லியம்ஸ் ( கேப்டன் ), ரோகித் சர்மா, ஜானி பெர்ஸ்டோ (விக்கெட் கீப்பர் ), விராட் கோலி, சகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், ஜஸ்பிரீத் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Prabhu Soundar:

This website uses cookies.