இப்படி வசமா சிக்கி கிட்டீங்களே சிவாஜி; ரவி சாஸ்திரியை வச்சு செய்யும் ரசிகர்கள் !!

இப்படி வசமா சிக்கி கிட்டீங்களே சிவாஜி; ரவி சாஸ்திரியை வச்சு செய்யும் ரசிகர்கள்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி குறித்து தொடர்ந்து காட்டமான கருத்துகளை தெரிவித்து வந்த முன்னாள் கேப்டன் கங்குலி தற்பொழுது பி.சி.சி.ஐ.,யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதை தொடர்ந்து ரவி சாஸ்திரியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

பிசிசிஐ-யின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதிப்பதற்காக, பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ப்ரிஜேஷ் படேலின் பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்தார் என்.ஸ்ரீனிவாசன். ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் சங்கங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு ஆதரவு அதிகமாக இருந்ததை அடுத்து, பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்துவரும் கங்குலி, அந்த பதவியை ராஜினாமா செய்யவேண்டும். வரும் 23ம் தேதி பிசிசிஐ-யின் தலைவராக கங்குலி பொறுப்பேற்கவுள்ளார்.

அதேபோல பிசிசிஐ-யின் செயலாளராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் பொருளாளராக அனுராக் தாகூரின் சகோதரரான அருண் துமாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பி.சி.சி.ஐ.,யின் தலைவராக பொறுப்பேற்க உள்ள கங்குலிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வரும் நிலையில் மறுபுறம் சமூக வலைதள ரசிகர்கள் பலர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியை வச்சு செய்து வருகின்றனர்.

உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமே ரவி சாஸ்திரி தான் என்றும், ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தொடர்ந்து காட்டமாக பேசி வந்த கங்குலி தற்பொழுது தலைவராக பதவியேற்க உள்ளதால் ரவி சாஸ்திரிக்கு இனி ஆப்பு கன்பார்ம் என்ற வகையிலேயே நெட்டிசன்கள் ரவி சாஸ்திரியை கிண்டலடித்து வருகின்றனர்.

அதில் சில;

 

Mohamed:

This website uses cookies.