2010-2019 தசாப்தத்தில் சிறந்த கேப்டன் இவரே – ஐசிசி கணக்கெடுப்பில் மக்கள் அளித்த பதில்!
இந்த பத்தாண்டுகளில் சிறந்த கேப்டன் யார் என்கிற ஐசிசியின் கணக்கெடுப்பில் சுவாரஷ்யமான தகவல் கிடைத்துள்ளது.
2019ஆம் ஆண்டு முடிவிற்கு வந்துதுள்ளது. அத்துடன் இந்த தசாப்தமும் முடிவிற்கு வருகிறது. இதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக வெற்றிகள் என ஒப்பீடுகள் வீரர்கள் மற்றும் அணிகள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில், சில முன்னணி பத்திரிக்கைகள் மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் இந்த தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளையும் வெளியிட்டுள்ளது. இது போன்ற கணிப்புகள் பல விமர்சனங்களையும் வரவேற்புகளையும் பெற்று வருகிறது.
இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தசாப்தத்தின் சிறந்த கேப்டன் யார்? உங்களது கருத்து என்ன? என ரசிகர்களிடம் கேள்விகளை எழுப்பியது.