இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், மூன்று T20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இத்தொடருக்கான வீரர்கள், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அணியில் நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல இந்திய அணி0யின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கீப்பர் எம்.எஸ்.தோனி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதில் ரிசப் பண்ட் கீப்பராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய ‘ஏ’ அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அப்போட்டிகளில் நன்றாக ஆடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, நவ்தீப் சைனி ஆகியோர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த அணியில் எதிர்பார்க்கப்பட்ட பல இளம் வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக மிடில் ஆர்டரில் திணறி வரும் இந்திய அணிக்கு ஒரு இளம் நட்சத்திர வீரரை எடுத்திருக்க வேண்டும் என டுவிட்டரில் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகின்றனர். மேலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு கேதர் ஜாதவை எடுத்திருக்கிறார்கள். அதற்கு பதில் இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர் சுப்மன் கில்லை எடுத்து இருக்கலாம் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
என தில்சுக் நகரில் அடுத்த விராட் கோலி என பெயர் பெற்றவர் தொடர்ந்து உள்ளூர் தொடர்களிலும் இந்திய ஏ அணிக்காகவும் தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் மிகவும் சிறப்பாக பங்களித்து வருபவர். அவரை கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.
மூன்று விதமான போட்டிகளுக்குமான இந்திய அணி கீழ்வருமாறு,
T20 : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிசப் பந்த், க்ருனால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், கலீல் அகமது, நவ்தீப் சைனி.
ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து விஜய் சங்கர், ஹர்டிக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகள் : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிசப் பந்த், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யூசுவேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், மொஹம்மது சமி, கலீல் அகமது, நவ்தீப் சைனி.