இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஹா. இவர் லாக் டவுன் காலத்திலும் விடாமல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தனது வீட்டின் உள்ளேயே சஹாவுக்கு அவரின் தந்தை பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து சஹா கூறுகையில்,
“எனது குடியிருப்பில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொதெல்லாம் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். சுவற்றில் பந்தை வீசி கேட்ச் பிடித்து பயிற்சி மேற்கொள்வேன். சில நேரத்தில் என் தந்தை எனக்கு உதவுவார். அதற்கான இடவசதி அங்கு உள்ளது.
Photo by Deepak Malik / Sportzpics for BCCI
காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது என்னால் சில மாதங்களுக்கு பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் தற்போது சிறப்பாக பயிற்சி செய்ய முடிகிறது.
லாக் டவுன் காலத்தில் டச் இல்லாமல் போவதை நான் விரும்பவில்லை. அதனால் குடியிருப்பு உள்ளேயே பயிற்சியை துவங்கிவிட்டேன். மாலை நேரத்தில் உள்ளே வசிக்கும் மக்களுக்கு நடை பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் அந்த நேரத்தில் நான் பயிற்சி மேற்கொள்கிறேன்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாக சில போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால், சிறந்தது. பயணம் செய்வது பாதுகாப்பானதா இல்லையா என்பதை பொறுத்து தான் எல்லாம் உள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இந்த நிலை நிச்சயமாக சரியாகும் என நினைக்கிறேன்” என்றார்.
இந்நிலையில் கிரிக்கெட் விமர்சகரும் ஊடகவியாளருமான ரோஹித் ஜூக்லானுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய முகமது ஷமி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்தார். அதில் தோனி குறித்தும் உரையாடினார் அப்போது “தோனியின் தலைமையின் கீழ் ஐபிஎல் போட்டிகளை தவிர அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி இருக்கிறேன். தன்னுடைய அணி வீரர்களை வழி நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே. நாம் தோனியுடன்தான் பழகுகிறோம் என்ற எண்ணமே நமக்கு வராது, அப்படி சக வீரர்களை நடத்துவார் அவர்” என்றார்.
மேலும் தொடர்ந்த முகமது ஷமி ” தோனி மிகப் பெரிய வீரர். அவருடன் ஏராளமான நினைவுகள் என்னிடம் இருக்கிறது. இப்போதும் தோனி வருவார் அவருடன் விளையாட வேண்டும் என நினைக்கிறோம். அவருடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் சக வீரர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். பின்பு நள்ளிரவு வரை அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். இதையெல்லாம் மிகவும் மிஸ் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார் அவர்.