11 வருடத்திற்கு பிறகு டீமுக்குள் வந்து… டக் அவுட்டாகி சிரிப்புக் காட்டிய பாக்., வீரர்!

11 வருடத்திற்கு பிறகு டீமுக்குள் வந்து… டக் அவுட்டாகி சிரிப்புக் காட்டிய பாக்., வீரர்!

11 வருடங்களுக்குப்பிறகு அணியில் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் வீரர், வந்தவுடன் டக் அவுட்டாகி வெளியேறியது அனைவரையும் நகைப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி துரதிர்ஷ்டவசமாக மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் தற்போது சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு களமிறங்கிய துவக்க வீரர் மஸூத் முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ஆனால் இரண்டாவது போட்டியில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபித் மற்றும் ஆசாத் இருவரும் நிலைத்து நின்று ஆடி 72 ரன்கள் சேர்த்தனர். அசாத் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அபித் அலி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சற்று தடுமாற்றம் கண்ட பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் நாள் முடிவில் வெறும் 120 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாற்றம் கண்டது. அதன்பிறகு மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டு கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு ஆடிய பாவத் ஆலம் என்பவர் சுமார் 11 வருடங்களுக்கு பிறகு தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக ஆடாமல் இருந்த இவர் இந்த போட்டியில் நிச்சயம் தன்னை நிரூபிக்க முயல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காமல் வெறும் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அதுவும் இவர் களத்தில் பேட்டிங் ஆடிய விதம் அனைவரையும் நகைப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் கிடைத்தும் இப்படி சொதப்பியதால் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.