திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்த ரவீந்தீர ஜடேஜா !!

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இணைந்தது மிகவும் அருமையாக உள்ளது என்று இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி 24ம் தேதி நடைபெற உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.



இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இலங்கை அணியால் முடியாது என்றாலும், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் போன்ற பல நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்திய அணி இந்த தொடரை எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

குறிப்பாக இந்தத் தொடரில் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ரவீந்திர ஜடேஜா நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடுவதால் அவருடைய ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

கான்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஜடேஜா அதற்குப் பின் நடைபெற்ற சவுத் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான பயிற்சியில் இந்திய அணியில் இணைந்திருக்கும் ரவீந்திர ஜடேஜா செய்தியாளர்கள் சந்திப்பில் தனது மனநிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் இந்திய அணியில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, தற்பொழுது நான் இந்திய அணிக்காக டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆவலாக காத்துக் கொண்டு உள்ளேன், கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் விளையாட துவங்கியது சந்தோசமாக உள்ளது என்று ஜடேஜா பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர் காயத்திலிருந்து குணமடைந்தது நேஷனல் கிரிகெட் அகடமி உடல் தகுதியை மேம்படுத்துவதற்கு மிகவும் கடினமாக உழைத்தேன் தற்பொழுது நான் என்னுடைய பயிற்சியை துவங்கியுள்ளேன் இது மகிழ்ச்சியான தருணம் என்றும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.