இரண்டாவது டெஸ்டில் கேஎல் ராகுல் செய்த ஒரே தவறு இதுதான்; சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!!

இரண்டாவது டெஸ்டில் கேஎல் ராகுல் இந்தத் தவறைத்தான் செய்தார் என சுட்டிக்காட்டியுள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் யாரும் எதிர்பாராத வகையில், கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்று டாஸ் போடுவதற்கு உள்ளே வந்தார்.

கோஹ்லி இல்லாதது, துவக்கம் முதலே இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் வரை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வந்த போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் டெஸ்ட் போட்டியை போல தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எளிதாக ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

இதனால் தென்னாப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்தது. கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பில் அனுபவமின்மை காரணமாக எளிதாக விட்டுக் கொடுத்துவிட்டார். மேலும் பந்துவீச்சாளர்களை சரிவர பயன்படுத்தவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் கேஎல் ராகுல் செய்த முக்கியமான தவறு இதுதான் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

“விராத் கோலி டெஸ்ட் போட்டிகளில் இல்லாதபோது, இந்திய தோல்வியுற்றது இதுவே முதல்முறை. ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டிரா செய்தது. ஆகையால் விராட் கோலி அணியில் இல்லாதபோது முதல் முறையாக இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கிறது. கேஎல் ராகுல் அனுபவம் இல்லை என்பதை உணர்த்திய ஒரு இடம், அவர் வீரர்களுக்கு பீல்டிங் செட் செய்ததுதான்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், அந்த அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவரை இந்திய அணி கட்டுப்படுத்த தவறிவிட்டது. அவர் பேட்டிங்கில் தடுமாறி வந்த போது, எளிதாக 1, 2 ரன்கள் விட்டுக்கொடுத்து அவரின் அழுத்தத்தை குறைத்து விட்டது. அவர் சிங்கிள் எடுக்கும் பொழுது பீல்டிங் கட்டுக்கோப்பாக இல்லாமல், பவுண்டரிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. இது மிகவும் தவறான ஒரு திட்டமாகும். இந்த இடத்தில் தான் கேஎல் ராகுல் அனுபவம் இல்லாதவர் என தெளிவாக உணர்த்தியது.

விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பில் இருக்கும் போது, இப்படி ஒரு இக்கட்டான சூழலில், எளிதாக 1, 2 ரன்கள் எடுக்க விடமாட்டார். சரியான இடத்தில் வீரர்களை நிறுத்தி கட்டுப்படுத்தி விடுவார். இதன்மூலம் பேட்ஸ்மேன் அழுத்தத்தை பெறுவார்கள். அதன்பிறகு விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்த முடியும். அடுத்த போட்டிகளில் இதனை கற்றுக் கொள்ள வேண்டும்.” என அறிவுறுத்தினார்.

Prabhu Soundar:

This website uses cookies.