U-17 உலகக்கோப்பை: நேரில் ரசித்த ரசிகர்களின் வருகை 10 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் நடைபெற்று வரும் இளையோர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை 10 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து ரசித்துள்ளனர்.

இந்தியாவில் முதன்முறையாக பிஃபா நடத்தும் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லி, கொல்கத்தா, கோவா, கேரளாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கிரிக்கெட் போட்டியில் மூழ்கி இருக்கும் இந்திய ரசிகர்கள், கால்பந்திற்கு ஆதரவு கொடுப்பார்களா? என்ற ஐயம் எழுந்தது. ஆனால் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரையிலான போட்டிகளை 10 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து ரசித்து அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

இதுவரை 17 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியை 10 லட்சத்து 7 ஆயிரத்து 396 பேர் ரசித்துள்ளனர். இன்னும் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 1985-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற தொடரை 12 லட்சத்து 30 ஆயிரத்து 976 ரசிகர்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இந்தியா முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.