வீடியோ: வெற்றிக்களிப்பில் ஆட்டம் போட்ட குரேஷியா பெண் அதிபர்.. காண்டாகிய ரஷ்யா பிரதமர்

உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் ரஷ்யா மற்றும் குரேஷியா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பெனால்டி முறையில் குரேஷியா 4-3 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு சென்றது. இதை மைதானத்தின் விஐபி அறையில் இருந்து வேடிக்கை பார்த்த குரேஷியா அதிபர் ஆட்டம் போடா ஆரம்பித்துவிட்டார், இதற்கு ரஷ்யா பிரஷமர் காண்டாகிவிட்டார் ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

போட்டியை ரசிக்க வந்த குரேஷியா அதிபர்

ரஷ்யாவில் நடக்கும் 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி காலிறுதி ஆட்டங்கள் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. நேற்று முன்தினம் நடந்த காலிறுதியில் ரஷ்யாவும், குரேஷியா அணிகளும் மோதின. இந்த ஆட்டத்தைப் பார்ப்பதற்காக குரேஷியா பெண் அதிபர் கோலிண்டா கிராபார் கிடரோவிக் மைதானத்துக்கு வந்திருந்தார். ஃபிபா நிர்வாக தலைவர் கியானி இன்பான்டினோ, ரஷ்ய பிரதமர் டிமித்ரி மேட்வடேவ் ஆகியோருடன் அமர்ந்து அவர் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

துள்ளி குதித்த குரேஷியா அதிபர் 

ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்தன. ஒவ்வொரு கோலின்போதும், ரஷ்ய பிரதமர் மற்றும் குரேஷியா அதிபர் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். ஆட்டம் சமநிலையில் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட் கொடுக்கப்பட்டது. அதில் 4-3 என குரேஷியா வென்றது. அப்போது, கைதட்டி, குதூகலத்தில் குதித்தார் குரேஷியா அதிபர்.

அதே நேரத்தில் தோல்வியடைந்த சோகத்தில், ரஷ்ய பிரதமர் முகம் சுருங்கி போய், முகத்தை வேறுபக்கமாக திருப்பி கொண்டார்.

இந்த வீடியோதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் அதிபர் என்றபோதும், தங்களுடைய அணியின் வெற்றியை ஒரு ரசிகையாக அவர் கொண்டாடியது பாராட்டுகளை குவித்து வருகிறது.

இதைத் தவிர போட்டி முடிந்த உடன், வீரர்கள் இருக்கும் அறைக்குச் சென்று, வீரர்களுடன், வெற்றியைக் கொண்டாடினார் குரேஷியா அதிபர் கோலிண்டா.

இந்த உலகக் கோப்பையில் பல ஜாம்பவான்கள் அணி வெளியேறிய நிலையில், 1998க்குப் பிறகு அரை இறுதிக்கு நுழைந்துள்ளது குரேஷியா.

உலகெங்கும் கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் இருப்பதற்கு காரணம், யாருக்கு எப்போது வெற்றி கிடைக்கும் என்பதை கணிக்க முடியாததுதான். நாட்டின் அதிபராக இருந்தாலும், அவர்களையும் ரசிகர்களாக்கியது இந்த உலகக் கோப்பை.

கால்பந்து ரசிகர்களின் டீவீட்கள்:

Vignesh G:

This website uses cookies.