இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொரோனாவுக்கு எதிரான போராட்டம் குறித்து நேற்று தனது டுவிட்டர் மூலம் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘கொரோனா வைரஸ் இன்று நம்மை சுவருக்கு பின்னால் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளி இருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான போர் என்பது உலக கோப்பையை வெல்ல வீரர்கள் தங்களது எல்லா சக்திகளையும் வெளிப்படுத்தி இறுதி வரை போராடுவது போன்றதாகும். நம்மை உற்றுநோக்குவது (கொரோனா) சாதாரண உலக கோப்பை அல்ல. அனைத்து உலக கோப்பைகளுக்கும் தாய். இது வெறும் 11 பேர் பங்கேற்கும் விளையாட்டல்ல. இந்த போராட்ட களத்தில் 140 கோடி மக்கள் நிற்கிறார்கள்.
வாருங்கள் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட்டு மூலம் கற்ற பாடத்தை செயல்படுத்தி கொரோனாவை வீழ்த்துவோம். இந்த விஷயத்தில் பிரதமர், மத்திய-மாநில அரசுகள் மற்றும் நமக்காக உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதில் 11 பேர் மட்டும் போராடவில்லை. 1.4 பில்லியன் மக்கள் போராடி வருகிறார்கள். வாருங்கள் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். 1.4 பில்லியன் மக்கள் என்ற இந்த ஆதிக்க மக்கள் சக்தி கரோனாவை வீழ்த்த ஒன்றிணைவோம். மானுடத்தின் உலகக்கோப்பையில் நம் கைகளை வைப்போம்.
நாம் இதில் வெற்றி பெறுவோம், ஆனால் அடிப்படைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம் பிரதமர் முன்னிலை வகித்து வழிநடத்துகிறார். மேலேயிருந்து வரும் உத்தரவுகளுக்கு அனைவரும் கீழ்படிய வேண்டும்.
வீட்டுக்குள் இருப்பது, சமூக விலகலை கடைப்பிடிப்பது என்ற இரண்டு உத்தரவு இதில் தனித்துவமானது. இது எளிதல்ல, வெற்றி பெறுவது எளிதல்ல, ஆனால் ஆட்டத்தில் வெற்றி பெற நாம் இந்த வலியின் ஊடாகத்தான் சங்கிலியை உடைக்க முடியும்” என்றார் ரவிசாஸ்திரி.