இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் ஒரு ஓவரில் 30 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 14-ஆம் திகதி சுர்ரே அணியும், சசக்ஸ் அணியும் மோதின.
விடியோவை நீங்களே பாருங்கள் வியந்து போவீர்கள் :
இப்போட்டியில் முதலில் ஆடிய சுர்ரே அணி 20-ஓவர் முடிவில் 193 ஓட்டங்கள் குவித்தது, சுர்ரே அணி சார்பில் ஆரோன் பின்ச் 64 பந்தில் 114 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதையடுத்து ஆடிய சசக்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து, 17-ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இப்போட்டியின் போது 18-வது ஓவரை வீஸ் வீசினார்.
இந்த ஓவரை பின்ச் எதிர் கொண்டார். இதில் முதல் பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்த பின்ச், அடுத்த நான்கு பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஒரே ஓவரில் 30 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.