கடப்பாரை பேட்டிங்டா எங்களோடது… 215 ரன்களை சேஸ் செய்து மிரட்டிய மும்பை இந்தியன்ஸ்… இஷான் கிஷன் – சூரியகுமார் பக்கா மாஸ்!

சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் அதிரடியால், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 215 ரன்கள் இலக்கை 18.5 ஓவர்களில் சேஸ் செய்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. இதில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

பிரப்சிம்ரன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து சற்று சொதப்பலான துவக்கம் அமைத்த பிறகு, ஷிகர் தவான் 30(20) ரன்கள் மேத்தியூ ஷாட் 27(26) ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்ச்சில் 11.2 ஓவர்களில் 95 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த்திருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் மும்பை அணியின் பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசினார். இந்த ஜோடி 53 பந்துகளில் 119 ரன்கள் குவித்து மிகப் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவியது. 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தனர்.

215 ரன்கள் இலக்கை துரத்துவதற்கு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். நல்ல பார்மில் இருந்த கேமரூன் கிரீன் 23 ரன்களுக்கு அவுட் ஆனார். மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக் கனவை தகர்த்தனர். இந்த ஜோடி 116 ரன்கள் குவித்தது.

31 பந்துகளில் 66 ரன்கள் அடித்து அவுட் ஆனார் சூரியகுமார் யாதவ். 41 பந்துகளில் 75 ரன்கள் குவித்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு அவுட் ஆனார் இஷான் கிஷன்.

கடைசியில் வந்த டிம் டேவிட் 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 19 ரன்கள் குவித்தார். திலக் வர்மா அதே பத்து பந்துகளில் 26 ரன்கள் அடித்து, 18.5 ஓவர்களில் 216 ரன்கள் எட்டுவதற்கு உதவினர்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

Mohamed:

This website uses cookies.