நடந்து முடிந்த புனே டெஸ்ட் போட்டி விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து அவரது 50வது டெஸ்ட் போட்டியாகும். டிசம்பர் 2014-ல் அடிலெய்டில் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
கேப்டனாக 50 டெஸ்ட்களில் இந்திய அணி 30 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. இதே கேப்டன்சி கட்டத்தில் ஸ்டீவ் வாஹ் 37 டெஸ்ட் போட்டிகளில் ஆஸி.யை வெற்றிப்பாதையில் வழிநடத்தியுள்ளார். ரிக்கி பாண்டிங் தலைமையில் 35 டெஸ்ட் வெற்றிகளும் தோனி தலைமையில் 26 டெஸ்ட் வெற்றிகளும் கைகூடியுள்ளன.
ஆனால் இவற்றையெல்லாம் விட கேப்டனாக பேட்டிங்கில் விராட் கோலி படைத்துள்ள சாதனை பல ஜாம்பவான்களையும் அவர் கடந்து விட்ட நிலையில் உள்ளது.
அதாவது ரிக்கி பாண்டிங், அலிஸ்டர் குக், ஆலன் பார்டர், கிரேம் ஸ்மித், மைக் ஆர்தர்டன், கிளைவ் லாய்ட், ஸ்ட்ராஸ், மார்க் டெய்லர், மைக்கேல் வான், ஸ்டீவ் வாஹ், விவ் ரிச்சர்ட்ஸ், ஹேன்சி குரேனியே, ரணதுங்கா போன்ற ஜாம்பவான்களை பேட்டிங் ரன் குவிப்பில் விராட் கோலி கடந்துள்ளார்.
Photo by Arjun Singh / SPORTZPICS for BCCI
விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக 50 டெஸ்ட் போட்டிகளில் 4956 ரன்களை குவித்துள்ளார், அதாவது அணி ஸ்கோரில் இவரது பங்களிப்பு 18.7% மேலும் டெஸ்ட் ஒன்றுக்கு 99.1 ரன்களை கேப்டனாக எடுத்து அனைத்து ஜாம்பவான்களையும் கடந்து முதலிடம் வகிக்கிறார்.
2ம் இடத்தில் ரிக்கி பாண்டிங் 4644 ரன்கள்
3ம் இடத்தில் அலிஸ்டர் குக் 4233 ரன்கள்
4ம் இடத்தில் ஆலன் பார்டர் 4044 ரன்கள்
5ம் இடத்தில் கிரேம் ஸ்மித் 3,937 ரன்கள்
6ம் இடத்தில் மிஸ்பா உல் ஹக் 3,867 ரன்கள்
7ம் இடத்தில் மைக் ஆர்தர்டன் 3,604 ரன்கள்
8 ம் இடத்தில் கிளைவ் லாய்ட் 3576 ரன்கள்
9 இடத்தில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 3,343 ரன்கள்
10ம் இடத்தில் மார்க் டெய்லர் 3,250 ரன்கள்
இந்த டாப் 10க்கு அடுத்தடுத்த இடங்களில் ஸ்டீபன் பிளெமிங், மைக்கேல் வான், ஸ்டீவ் வாஹ், விவ் ரிச்சர்ட்ஸ், தோனி, ஹேன்சி குரோனியே, ரணதுங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.