கொரோனா காலத்தில் நான்கு மாதங்கள் வெளிநாடுகளில் விளையாடப் போகும் கிரிக்கெட் வீரர்! கிரிக்கெட் வாரியம் கவலை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது வரை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கடந்த ஒரு மாதமாக ஒவ்வொன்றாக மீண்டும் விளையாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் இந்த வருடம் செப்டம்பர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. அதுவும் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடக்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்களும் அங்கு வந்து விளையாட உள்ளனர்.
சான்ட்னர், ராஸ் டெய்லர், காலின் மன்ரோ, டிம் செய்ஃபர்ட், கிளென் பிலிப்ஸ், கூரே ஆண்டர்சன், ஸ்காட் குகலைய்ன், நிக் கெல்லி, இஷ் சோதி ஆகிய வீரர்கள் இந்த வருட சிபிஎல் போட்டியில் விளையாடுகிறார்கள். பிரெண்டன் மெக்குல்லம் டிரின்பேகோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். இந்த 10 பேரும் இந்த வாரம் சிபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்திலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்கிறார்கள்..
இதன்பிறகு ஐபிஎல் போட்டியில் விளையாட சான்ட்னர், ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்கிறார். இஷ் சோதி, ராஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராகவும் மெக்குல்லம் கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றுவதற்காக ஐபிஎல் போட்டியில் இணைந்துகொள்வார்கள். இவர்களில் நியூசிலாந்து வீரர்களில் சான்ட்னர் மட்டும் சிபிஎல், ஐபிஎல் என இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளார்.
நவம்பர் 8 அல்லது 10-ல் ஐபிஎல் முடிவடையும். இதன்பிறகு நியூசிலாந்து திரும்பவுள்ள சான்ட்னர், சோதி, மெக்குல்லம் ஆகிய மூவரும் இரு வாரங்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதனால் ஒருநாள் தோற்று இவருக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கவலையில் இருக்கிறது.