வீடியோ: கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் அடிதடி! வெளியான வைரல் வீடியோ..

வீடியோ: கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் அடிதடி! வெளியான வைரல் வீடியோ..!

டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்க்கு முன்னாள் வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ஆம்பட்ஸ்மன் எனப்படும் விசாரணை அதிகாரி நியமிக்கபட்டார். அடுத்ததாக, தில்லி கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவரை நியமிக்க ஆலோசனை நடந்தது. அப்போது சிறிய சலசலப்பாக உறுப்பினர்கள் மத்தியில் துவங்கியது.

பின்னர், ஆண்டு நிதி அறிக்கை மற்றும் நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக  அப்போது குற்றம் சாட்டப்பட்டது. உடனே, ஆத்திரமடைந்த மேடையில் இருந்த நிர்வாகிகள் சிலர் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகியது. இதனால், தில்லி கிரிக்கெட் சங்கத்திற்கு பெருத்த அவமானமாகவும் போனது. இதுகுறித்து, டெல்லியை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் அதிகாரிகள் என பலரும் இந்த மட்டமான செயலிற்கு கண்டனம் தெரிவிட்துள்ளனர்.

இந்த தரக்குறைவான செயலிற்கு பிறகு, டெல்லி கிரிக்கெட் சங்கத்தை கலைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீர் வலியுறுத்தி உள்ளார். மேலும், கைகலப்பில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரிடமும் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்பீர் வெளியிட்ட பதிவில், உறுப்பினர்களின் இந்த கேவலமான நடத்தையால் டிடிசிஏவின் மதிப்பு குலைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்த கம்பீர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் போர்டு செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தலையிட்டு இந்த விவகாரத்தில் தீர்வு காணவும் கோரிக்கை விடுத்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.