கடைசி ஐபிஎல் தொடரில் ஆடப் போகும் 5 வீரர்கள்!

இந்தாண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் 12வது சீசனை எங்கு நடத்துவது என்ற பெரும் குழப்பம் நிலவியது. தென்னப்பிரிக்காவிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலேயோ ஐபிஎல் தொடரை நடத்தலாம் அல்லது பாதி தொடரை இந்தியாவிலும், பாதியை வெளிநாட்டிலும் நடத்தலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் 23ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

‘Caravan Format’ என்று அழைக்கப்படும் முறையில் போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. வழக்கமாக, போட்டியில் மோதும் இரு அணிகளின் ஏதாவது ஒன்றின் உள்ளூரில் தான் ஆட்டம் நடைபெறும். சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகிறது என்றால், போட்டி சென்னையிலோ அல்லது மும்பையிலோ தான் நடைபெறும்.

ஆனால், இந்த கேரவன் முறையில், ஐந்து அல்லது ஆறு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த நகரங்களில் மட்டுமே அனைத்து அணிகளும் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிறிஸ் கெய்ல்

கடந்த பல வருடங்களாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வந்த இவருக்கு 39 வயதாகிறது. இந்த வருட முடிவில் இவருக்கு நாற்பது வயதாகி விடும். வயது முதுமையின் காரணமாக இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு இறுதி தொடராக கூட அமையலாம்.

யுவராஜ் சிங் 

தனது ஐபிஎல் வாழ்க்கையில் டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், புனே வாரியர்ஸ் போன்ற பணிகளுக்காக ஆடியுள்ளார். தற்போது அவரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது. அவர் கிட்டத்தட்ட 37 வயதாகிறது. ஐபிஎல் தொடரின் கடைசி தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேன் வாட்சன்

தற்போது 38 வயதான ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். நன்றாக ஆடி வரும் நபர் இந்த தொடருடன் தனது ஐபிஎல்பயணத்தை முடித்துக் கொள்வார் எனவும் தெரிகிறது.

லசித் மலிங்கா

தற்போது மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளனர் . இந்த தொடர் தொடருடன் தனது ஐபிஎல்அத்தியாயத்தை முடித்துக் கொள்வார் என்று பலரும் பேசி வருகின்றனர்.

முரளி விஜய்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல வருடங்களாக ஆடி அவர் தற்போது தனது சரியான ஆட்டத்திறன் இல்லாமையால் தவித்து வருகிறார் . மேலும் இவர் தற்போது இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் எனவும் பலர் கூறி வருகின்றனர்.

Sathish Kumar:

This website uses cookies.