ஒருநாள் போட்டியில் செய்ததை டெஸ்ட் போட்டியில் செய்ய தவறிய 5 வீரர்கள்

கிரிக்கெட் உலகில் சிறந்த வீரராகவே இருந்தாலும் மூன்று விதமான போட்டிகளிலும் சாதித்து விட முடியுமா என்றால் அது கேள்விக்குறி தான். சிலர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் நன்றாக ஆடினாலும் டெஸ்ட் தொடர் என்று வந்தால் அணியில் இடம் பெறுவதே கடினமான இலக்காக பார்க்கின்றனர். மேலும், இடம் பெற்றாலும் ஒருநாள் போட்டியை போலவே இதிலும் தனக்கான இடத்தை பதிக்கிறார்களா என்றால் அதுவும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட ஒன்று தான்.

அப்படி ஒருநாள் போட்டியில் அனைவரது மனதையும் கவர்ந்து விட்டு, டெஸ்ட் தொடர்கள் என்றால் காணாமலேயே போன முக்கிய 5 வீரர்களை தான் பார்க்க இருக்கிறோம்.

1. போய்டா டிப்பேனார்

தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டிப்பேனார் 107 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ளார். இவர் 3,421 ரன்கள் குவித்தியுள்ளார். இதில் 4 சதங்களும் 26 அரைசதங்களும் அடங்கும். இவரது சராசரி 42 க்கும் மேல்.

ஆனால், 38 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள டிப்பேனார் 1,718 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதமும் 7 அரை சதமும் அடங்கும். இவரது சராசரி வெறும் 30க்கும் கீழ்.

2. மகேந்திர சிங் தோனி

BRISBANE, AUSTRALIA – DECEMBER 18: MS Dhoni of India bats during day two of the 2nd Test match between Australia and India at The Gabba on December 18, 2014 in Brisbane, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

அனைவருக்கும் நிச்சயம் ஆச்சர்யமாக தான் இருக்கும் தோனியை இந்த வரிசையில் பார்க்கும்பொழுது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அசைக்க முடியாத கேப்டனாக இருந்து வந்த தோனி, பேட்டிங்கில் பெரிதாக சாதிக்க வில்லை.

ஒருநாள் போட்டியில் 9,967 ரன்களை 318 போட்டிகளில் விளாசியுள்ள தோனியின் சராசரி 51 க்கும் மேல். ஆனால் டெஸ்ட் போட்டியில் இவரது சராசரி வெறும் 38 தான்.

3. சுரேஷ் ரெய்னா

India’s batsman Suresh Raina plays a shot during the second day of their second cricket test match against New Zealand in Bangalore, India, Saturday, Sept. 1, 2012. India leads the series 1-0. (AP Photo/Aijaz Rahi)

ரெய்னாவின் டெஸ்ட் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும், அதை இவரால் கடைசி வரை கொண்டு செல்ல முடியவில்லை. இலங்கை அணிக்காக தனது அறிமுக போட்டியில் சதம் விளாசிய ரெய்னா அதன் பின் ஒரு ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

2005 ம் ஆண்டு டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கிய ரெய்னா வெறும் 18 டெஸ்ட் போட்டிகளே ஆடியுள்ளார். இவரது சராசரி 27 க்கும் குறைவு.

4. யுவராஜ் சிங்

லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு இவரே காரணமாக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் இவரின் பங்களிப்பு மிக மிக குறைவு.

டெஸ்ட் அரங்கில் வெறும் 40 போட்டிகள் ஆடியுள்ள யுவராஜ் 1,900 ரன்களே அடித்துள்ளார். இவரது சராசரி வெறும் 33.92 தான்.

5. மார்டின் கப்டில்

ஒருநாள் போட்டியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான கப்டில் உலகக்கோப்பையில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இவரது சராசரி 42 க்கும் மேல். 159 ஒரு நாள் போட்டியில் 5,976 ரன்கள் அடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இவரது சராசரி 30 க்கும் கீழ். 47 டெஸ்ட் போட்டிகளில் 2,586 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும்

Vignesh G:

This website uses cookies.