2019 ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி சரி செய்ய வேண்டிய ஐந்து பிரச்சனைகள்
அடுத்த வருடம்(2019) நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் தங்களது பலவீனங்கள் மற்றும் குறைகளை அறிந்து அதனை சரி செய்து, உலகக்கோப்பைக்கு முன்னதாக தங்கள் அணியை முழு பலம் கொண்ட அணியாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
அந்த வகையில் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி சரி செய்ய வேண்டிய ஐந்து பிரச்சனைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
- மிடில் ஆர்டர்
இந்திய அணியை மிடில் ஆர்டர் பிரச்சனை நீண்ட காலமாக துரத்தி கொண்டே வருகிறது. மிடில் ஆர்டரில் குறிப்பாக நான்காவது வீரராக யாரை களமிறக்குவது என்பதில் இந்திய அணி இதுவரை மியூசிகல் சேர் விளையாட்டை போன்றே ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரரை களமிறக்கி பலப்பரீட்சை செய்து வருகிறது. இருந்த போதிலும் நான்காவது இடத்தில் களமிறங்க சரியான வீரர் இதுவரை கிடைக்கவில்லை.
நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் பட்டியலில் கே.எல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களில் ஒருவர் கூட நான்காவது இடத்திற்கு நான் முழு தகுதியானவன் என்பதை இன்னமும் நிரூபிக்கவில்லை என்பதே வேதனை தரும் விசயம்.