உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உங்களுக்கெல்லாம் தகுதி கிடையாது!
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் இந்தியா சென்ற ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றது குறித்து பேசியுள்ளார்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா விளையாட துளி கூட தகுதி இல்லாத அணி என்றும் சாடியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலிய அணியை மனரீதியாக தோற்கடித்தது
சென்ற ஆண்டு இறுதியில் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
இறுதி மூன்று போட்டிகளில் குறிப்பாக காபாவில் நடந்த கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது இன்னும் எங்களால் நம்பமுடியவில்லை. குறிப்பாக கடைசி போட்டியில் அவ்வளவு எளிதில் இலக்கை எதிரணியால் ஸ்கோர் செய்து விட முடியாது. ஆனால் 300க்கு மேல் இருந்த இலங்கை இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சேஸ் செய்து வெற்றி பெற்றது. கண்டிப்பாக இந்திய அணி மனரீதியாக தான் ஆஸ்திரேலிய அணியை வியூகம் வகுத்து தோற்கடிதத்து என்று கூறியுள்ளார்.
அந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் மிக அற்புதமாக பந்துவீசும் சுப்மன் கில் புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தனர். இது அவர்களுடைய மன வலிமையை நன்கு பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய அணிக்கு தகுதி கிடையாது
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் இல்லை என்றாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. சொந்த மண்ணில் விளையாடும் அணி எந்த மாதிரி சூழ்நிலையிலும் வெற்றியைப் பபெற்று விட வேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய அணி அதை செய்யத் தவறியது.
மேலும் கடந்த 32 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் தொடரில் எந்த எதிரணியிடமும் ஆஸ்திரேலிய அணி தோல்வி பெற்றதில்லை. முதல் முறையாக இந்திய அணியிடம் தோல்வி பெற்றது. என்னைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி இல்லாத அணி தான் என்று பிராட் ஹாக் இறுதியாக தன்னுடைய கருத்தை கூறி முடித்தார்.