இந்த தொடரில் விளையாடும் ஒரு வீரருக்கும் உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காது ; ரகசியத்தை போட்டுடைத்த அனில் கும்ப்ளே..
ஆசியன் தொடரில் விளையாடும் ஒரு வீரர்களுக்கு கூட உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காது என அனில் கும்ப்ளே தேர்வித்துள்ளார்
ஆசியாவிற்கான ஒலிம்பிக் கவுன்சில், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹோங்சு மாகாணத்தில் நடைபெறுவதாக அறிவித்ததால் ஆசிய நாட்டில் இருக்கும் ஒவ்வொரு நாடுகளும் அதற்கு தயாராகுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஆசியாவில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியும் ஆசியன் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையிலான சீனியர் இந்தியா அணி உலக கோப்பை தொடருக்கு தயாராகுவதால் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட பட்டாளத்தை ஆசிய தொடரில் பிசிசிஐ விளையாட வைக்க உள்ளது.
இதனால் ஆசிய தொடர் குறித்தும் அதில் விளையாடும் இளம் வீரர்கள் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த ஆசிய தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற பேச்சு அடிபட்டு வருவதால் அது குறித்த சுவாரசியமான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பேசி வருகின்றனர். அந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே சைனாவில் நடைபெறும் ஆசிய தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசியுள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே பேசுகையில்.,*உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதம் உள்ளது,இதனால் அணியில் எந்த மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படலாம்.ஒருவேளை தற்போதுள்ள சீனியர் இந்திய அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் இளம் வீரர்கள் ஒருசிலருக்கு வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் தற்போதைய இந்திய அணியில் அணியில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.ஆனால் எதிர்வரும் காலங்களில் எதுவெண்டுமாலும் நடைபெறலாம்.குறிப்பாக சைனாவில் நடைபெறும் ஆசிய தொடரில் இடம்பெறும் வீரர்களுக்கி உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காது.ஆனால் ஆசிய தொடர் இந்த இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளர்.
ஆசியன் தொடருக்கான இந்திய அணி..
ருத்ராஜ் கெய்க்வாட் (C), யஷஷ்வி ஜெய்ஸ்வால்,ராகுல் திரிபாதி,திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா(Wk), வாசிங்டன் சுந்தர், சபாஷ் அஹமது, ரவி பிஷ்னாய் , ஆவேஷ் கான், அர்ஷ்திப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன்சிங்.