முதல்முறையாக வந்துள்ள “இம்பாக்ட் பிளேயர் ரூல்”… சிஎஸ்கே, குஜராத் அணிகள் எடுத்துள்ள “இம்பாக்ட் பிளேயர்ஸ்” பட்டியல்.. தலா 5 வீரர்கள்!

இந்த வருட ஐபிஎல் சீசனில் அறிமுகப்படுத்தியுள்ள “இன்பாக்ட் பிளேயர்” விதிமுறைப்படி சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் எடுத்துள்ள வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

பதினாறாவது ஐபிஎல் சீசன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கிவிட்டது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த வருட ஐபிஎல் சீசனில் புதிதாக சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அதில் முதலாவதாக, டாஸ் போடப்பட்ட பிறகு, அதில் வந்துள்ள முடிவுகளுக்கு ஏற்றவாறு, போட்டி துவங்குவதற்குள் பிளேயிங் லெவனை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொன்று, இன்பாக்ட் பிளேயர் எனும் விதிமுறை பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. பிளேயிங் லெவன் தவிர்த்து கூடுதலாக 4 வீரர்களை எடுத்து வைத்துக் கொள்ளலாம். அந்த பட்டியலில் இருக்கும் ஏதேனும் ஒரு வீரரை, பிளேயிங் லெவனில் இருக்கும் ஒரு வீரருக்கு பதிலாக உள்ளே கொண்டு வந்து விளையாட வைத்துக்கொள்ளலாம் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வரும் முதல் போட்டியில் பிளேயிங் லெவன் தவிர்த்து இரு அணிகளும் கூடுதலாக தேர்வு செய்துள்ள இம்பாக்ட் வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.

குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்திருக்கும் இன்பாக்ட் வீரர்கள் பட்டியல்:

சாய் சுதர்சன், ஜெயந்த் யாதவ், மோஹித் சர்மா, அபினவ் மனோகர், கேஎஸ் பரத்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்திருக்கும் இம்பாக்ட் வீரர்கள் பட்டியல்:

துஷார் தேஷ்பாண்டே, சுப்ரன்ஷு சேனாபதி, அஜிங்க்யா ரஹானே, ஷைக் ரஷீத், நிஷந்த் சிந்து.

Mohamed:

This website uses cookies.