இந்தியாவில் நடைபெறும் மாபெரும் உள்ளூர் தொடர் ரத்து ; 87 ஆண்டுகளில் முதல் முறை !
இந்தியாவில் கடந்த 87 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரஞ்சி கோப்பை தொடர் இந்த வருடம் முதல் முறையாக ரத்து செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த வருடம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் விஜய் ஹசாரே கோப்பை தொடர் 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் போட்டி, மகளிர்கான 50 ஓவர் ஆகியவற்றை கண்டிப்பாக நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ஒரே ஆண்டில் இரண்டு கோப்பை தொடர்களில் நடப்பது சாத்தியமில்லை என்றாலும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தினால் பல மாதங்களுக்கு தடுப்பு முகாமில் வீரர்களை வைத்திருக்க வேண்டும் என்பதாலும் அனைத்து கிரிக்கெட் மாநில சங்கங்கள் ஒப்புதலோடு இந்த வருடம் ரஞ்சிக் கோப்பை தொடரை நடத்த போவதில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் ரஞ்சி கோப்பை தொடர் நடைபெறாததால் அதில் விளையாட இருந்த வீரர்களுக்கு இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து மேலும் அறிவிக்கப்பட்டுள்ள தகவலில் தேர்வுக்குழுவினர், கிரிக்கெட் வீரர்கள், மாநில கிரிக்கெட் சங்கங்கள் என அனைவரின் முடிவையும் கேட்டு விட்ட பிறகு இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் ஒரே ஆண்டில் நடந்த வாய்ப்பில்லை என்றாலும் ரஞ்சி கிரிக்கெட் தொடரை இந்த வருடம் கை விடுவது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ரஞ்சி கோப்பை தொடரை தவிர அனைத்து விதமான உள்ளூர் போட்டிகளில் கண்டிப்பாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1934 முதல் ரஞ்சி கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 86 முறை ரஞ்சி கோப்பை தொடர் நடைபெற்றிருக்கிறது.
இத்தனை வருடங்களில் முதன் முதலாக இந்த வருடம்தான் ரஞ்சி கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டிராபி உள்ளூர் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழக அணி முன்னேறி சாதனை படைக்க காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.