இப்போவே சொல்றேன் நோட் பண்ணிகோங்க… இந்த வருஷம் 50-ஓவர் உலககோப்பையை இந்த டீம் தான் அடிக்கும்; கண்டிப்பா அது ஆஸ்திரேலியா கிடையாது – ஆஸி., லெஜெண்ட் பிரெட் லீ கணிப்பு!

இந்த வருடம் நடக்கவுள்ள 50-ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகமாக இருக்கிறது? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பட்டென்று பதில் கூறியுள்ளார் ஆஸ்திரேலியா லெஜன்ட் பிரெட் லீ.

50-ஓவர் உலகக்கோப்பை, இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 13வது முறையாக நடக்கவுள்ள இந்த 50-ஓவர் உலக உலகக்கோப்பை இம்முறை இந்தியாவில் நடக்கிறது. 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் நடந்தப்பட்டது. தற்போது நான்காவது முறையாக இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது.

கடைசியாக, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. அதன்பிறகு 2015, 2019 இரண்டு முறையும் அரையிறுதி வரை சென்று பெரும் ஏமாற்றத்தை அடைந்ததால், இம்முறை இந்தியாவில் நடக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கட்டாயம் கோப்பையை தட்டிச் செல்லவேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு திட்டங்களை இந்திய அணி நிர்வாகம் வகுத்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடர்களும் அதைக் குறிக்கோளாகக் கொண்டே நடத்தப்படுபவை தான். 

ஜனவரி மாதம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற தலா 3 ஒருநாள் போட்டிகளில் அனைத்தையும் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவுற்றவுடன், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாடி வருகிறது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தொல்வியை தழுவியது. இந்தாண்டு இதுவரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் அபாரமாக துவங்கி அரையிறுதி வரை சென்ற இந்திய அணி கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் இருந்தது. துரதிஷ்டவசமாக நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. இம்முறையும் இந்திய அணி கோப்பை வெல்லக்கூடிய அணிகளில் முதன்மையான அணியாக இருக்கின்றது.

இந்நிலையில், இந்தாண்டு 50-ஓவர் உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்? என்று ஆஸ்திரேலியா லெஜெண்ட் பிரெட் லீ-இடம் கேட்கப்பட்டது. அவர் எந்தவித தயக்கமும் இன்றி, “இந்திய அணி கட்டாயம் இந்த உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் கணிக்கிறேன்.” என கூறினார்.

பிரெட் லீ தற்போது கட்டாரில் நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். அந்தத் தொடரில் ஆசியா லயன்ஸ், இந்தியா மகாராஜாஸ் மற்றும் உலக ஜெயின்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பங்கேற்கின்றன. இதில் உலக ஜெயின்ஸ் அணிக்காக பிரெட் லீ விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

Mohamed:

This website uses cookies.