பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் காலேட் மஷுட்

கதை என்ன?

முன்னாள் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் காலேட் மஹ்மூத் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். தாக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதிக்கப்பட்டுள்ளது. அவரது 46வது பிறந்தநாள் கொண்டாடி ஒரு வாரம் கழித்துதான் இந்த சம்பவம் நடந்தது.

“இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) கூட்டத்திற்கு அவர் ஏன் வரவில்லை என விசாரித்த போது தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்தது தெரியவந்தது,” என வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் கூறினார்.

“அவர் இப்போது அரைக்கோமாவில் உள்ளார். ஆனால், மருத்துவர்கள் எதுவும் பயப்படும் போல் சொல்லவில்லை,” என மேலும் கூறினார்.

வங்கதேச கிரிக்கெட் வளர்ச்சி வாரியத்தின் தலைவரான மஹ்மூத் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்திற்கு வரவில்லை, இதனால் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். இதை பற்றி அவர்கள் விசாரித்த போது, மஹ்முதை மருத்துவமனையில் அனுமதித்தது தெரிய வந்தது.

தனது கிரிக்கெட் பயணத்தை 2006இல் முடித்து கொண்டதும், நிர்வாக பணியில் பணியாற்றி வருகிறார். வங்கதேசத்திற்காக 12 டெஸ்ட் மற்றும் 77 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.