ஹோபார்ட் ஹரிகேன்சின் கேப்டனாக, ஜார்ஜ் பெய்லி மீண்டும் நியமனம்
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி மீண்டும் பிக் பாஷ் லீக்கின் அடுத்த சீசனுக்கு ஹோபார்ட் ஹர்கேன்சுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் விக்கெட் கீப்பட் டிம் பெய்ன் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிக் பாஷ் சீசனில் ஹோபார்ட் ஹடிகேன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டார் ஜார்ஜ் பெய்லி.
8 ஆட்டத்தில் விளையாடிய அவர், 247 ரன் குவித்துள்ளார். மேலும், இதில் அவரது சராசரி 49.40 ஆகும்.
பெய்லி மிக நன்றாக் ஆடினாலும் அவரது அணியான ஹோபார்ட் ஹர்கேன்ஸ் 8 அணிகள் கொண்ட தொடரில் 7ஆவது இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது.
2016 ஐ.பி.எல் ல் ஜார்ஜ் பெய்லி புனே அணியின் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினர என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், வெளிநாட்டு வீரரக அணியில் இவருக்குப் பதில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு வாய்ப்பளித்தது.
தற்போது அவருக்கு 35 வயதாகிறது. 6ஆவது பி பாஷ் சீஅனில் தான் ஹோபார்ட் ஹர்கேன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ராஜினாம செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் ராஜினாம செய்த பதவி அவரிடம் மீண்டும் தேடி வந்துள்ளது. இதனைப் பற்றி அவர் கூறியதாவது,
இந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கேப்டன் பதவியைத் துறந்து இரண்டு வருடங்களாகிறது.
தற்போது அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. புதிய தலைமை செய அதிகாரி, புதிய பயிற்சியாளர் என அனைத்து மட்டத்திலும் மாறுபடுகிறது.
இந்த ஒரு தொடரைத் தான் டாஸ்மானியா மாகாணம் இன்னும் வெற்றி பெறவில்லை. அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு செயல்படுவேன்.
அதே போன்று துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள, டிம் பெய்ன் கூறியதாவது,
ஜார்ஜ் பெய்லிக்கு துணைக் கேப்டனாக இருப்பது சற்று மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுடைய தலைமைத் திறன் ஒன்றாக செயல்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
துணைக் கேப்டன் டிம் பெய்ன் 8 ஆட்டத்தில் 227 ரன் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய சுற்றுப்பயணத்தில் உள்ள 3 டி20 போட்டிகளில் விளையாட டிம் பெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 21ஆம் தேதி ஹோனார் ஹரிகேன்ஸ் அணி மெல்போர்ன் ரெனிகார்ட்ஸ் அணியுடன் முதல் போட்டியில் மோதவுள்ளது.