சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்!

2003 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாட துவங்கிய பாய்ட் ரான்கின் தற்பொழுது தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். சுமார் 18 ஆண்டுகளாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

153 போட்டிகளில் அயர்லாந்து அணிக்காக விளையாடியும், சில போட்டிகள் இங்கிலாந்த் அணிக்காகவும் விளையாடி உள்ளார். இவர் ஒரு ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் விளையாடியது

பந்துவீச்சில் அசத்திய பாய்ட் ரான்கின்

6 அடி 7 அங்குலம் உடைய இவர் சுமார் 15 ஆண்டுகளாக பல கன்ட்ரி அணிகளுக்காக விளையாடியுள்ளார். வார்விக்ஷிரே, டெர்பிஷிரே, எஸ்செக்ஸ் மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார். மொத்தமாக 108 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி 352 விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இவர் ஒரு போட்டியில் 55 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது பௌலிங் அவரேஜ் 26.46 ஆகும்.அதேசமயம் 140 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். 97 டி20 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

மேலும் அயர்லாந்து அணிக்காக 2007 மற்றும் 2011ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. 2013-14 ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்காக ஒரு ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார். அதேசமயம் இங்கிலாந்து அணிக்காக மேலும் ஏழு ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

ஓய்வு எடுக்க இதுதான் சரியான நேரம்

தனது ஓய்வு பற்றி விளக்கம் அளித்த அவர், பல ஆண்டுகளாக நான் எனது நாட்டுக்காக விளையாடி விட்டேன். மேலும் கண்ட்ரி கிரிக்கெட்டில் வார்விக்ஷிரே அணிக்காக பல ஆண்டுகளும் விளையாடி இருக்கிறேன். ஓய்வு எடுக்க இதுதான் சரியான நேரம் என நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்த இவரும் ஒரு காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் 2018 ஆம் ஆண்டு அயர்லாந்து அணி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் விக்கெட்டை தனது அணிக்காக கைப்பற்றியதே, தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.