கெவின் பீட்டர்ஸன் மிகவும் திமிர் பிடித்த வீரர் ; முன்னாள் வீரர் காட்டம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்ஸன் மிகவும் திமிர் பிடித்தவர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் டெய்லர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் டெய்லர். இவர் தனது 26வது வயதில் குணப்படுத்த முடியாத இதயக்கோளாறு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இவர் ‘கட் ஷார்ட்’ என சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய போது தன்னிடம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் திமிருத்தனமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெய்லர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளது,‘நான் எப்போதும் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவேன். அதே போல எனது அறிமுக போட்டியில் கெவின் பீட்டர்சன் சிறப்பாக செயல்பட்டதால், அவருக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு வழங்கினேன். ஆனால் அவர் என்னைப்பார்த்து நேரடியாக கேட்ட முதல் கேள்வி, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்றார் எனது திட்டத்தை புரிந்து கொள்ளாமல் தனது போக்குக்கு பேசினார். அவர் அணியில் இருந்த வரை ஒரு வீரருடனும் ஒத்துபோனது இல்லை. பிளவை தான் உண்டு பண்ணுவார். அவர் ஒரு திமிரு பிடித்தவர்.’ என்றார்.