தற்போது நடைபெற்று வரும் கவுண்ட்டி பருவத்தின் முடிவில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பால் காலிங்வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், அவரது நாட்டின் கவுண்ட்டி சாம்பியன்ஷிப் அணியான டர்ஹாம் அணிக்காக அவர் தற்போது ஆடிவருகிறார்.
2010 ஆம் ஆண்டில் ஐசிசி உலகக்கோப்பை டி20 க்கு அவர் இங்கிலாந்தை வழிநடத்தி கோப்பையை வென்றபோது, உலகக் கோப்பையில் தொடரில் கோப்பை வென்ற முதல் இங்கிலாந்து கேப்டனாக காலின்ட்வுட் உருவெடுத்தார். 2011 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றார்.
“நான் இந்த நாள் இறுதியில் வரும் என்று எதிர்பார்த்தது தான் ஆனால் அது இப்படி ஒரு உணர்ச்சிகரமாக இருக்கும் என்று நான் உணரவில்லை, எனது கடைசி ஆற்றல் வரை கிரிக்கெட் ஆடினேன், அதற்க்காக என்னை அர்பணித்தேன் என்பதில் எனக்கு முழு பெருமை,” இவ்வாறாக காலின்ட்வுட் தனது கிளப் வலைத்தளத்தில் பதிவிட்டார்.
https://www.durhamccc.co.uk/news-and-media/collingwood-announces-retirement .
“நான் டர்ஹாம் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுக்காகவும் என்னை அர்பணித்தேன், இதுவரை நான் கற்பனை செய்ததைவிட மிக அதிகமான பாக்கியம் எனக்கு கிடைத்தது,
“அதேபோல கிரிக்கெட் தாண்டிய எதிர்காலத்தை நான் எதிர்கொண்டு காத்திருக்கிறேன், புதிய சவால்களை எதிர்நோக்கியுள்ளேன் என்பதில் எனக்கு உற்சாகம் உண்டு.”
22 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் தொடரிலிருந்து முதல் தர கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கொண்ட காலிங்வுட் தற்போது தான் தனது கவுண்ட்டி வாழ்க்கைக்கு முடிவை அளித்துள்ளார்.
அவர் 68 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 4,259 ஓட்டங்களை எடுத்தார், செப்டம்பர் 24 ம் தேதி தொடங்க இருக்கும் மித்திரெக்ஸிற்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக ஆடுகிறார்.