பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த வீராங்கணை மரணம்!!

முன்னாள் இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர் ஜேப் பிரிட்டென் தனது 58 வயதில் இங்கிலாந்தில் இயற்கை எய்தினார். இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 1993ல் உலகக்கோப்பை வென்றது. அந்த அணியில் முக்கியமான் அங்கமாக திகழந்தவர் ஜேன்.

இங்கிலாதிற்காக 27 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 63 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளார் ஜேன் பிரிட்டென்.

27 டெஸ்ட் போட்டிகளில் 1935 ரன் அடித்துள்ளார். இதுவே இது வரை பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன் ஆகும். மேலும், 2003 வரை ஒருநாள் கிரிக்கெட்டிலும் இவர் தான் அதிக ரன் அடித்தவராக் இருந்தார்.

19 வருடங்கள் இங்கிலாந்து அணிகாக ஆடியுள்ளார் ஜேன். மொத்தம் 10 சர்வதேச சதங்கள் அடித்துள்ளார். அவருடைய அதிகபட்ச ரன் 168 ஆகும்.

இங்கிலாந்து வீராங்கணை சார்லெட் எட்வர்டஸ் அவருடைய ஆண்மா சாந்தி அடைய ட்விட்டரில் இரங்கல் பதிவு செய்துள்ளார்.

அவர் மேலும், குறிப்பிட்டதாவது,

அவர் எங்களுக்கெள்ளாம் ஓரு முன்னுதாரனமாக இருந்து வந்தவர். பெண்கள் கிரிக்கெட்டின் ஒரு மிகச்சிறந்த வீரர் ஆவர் அவர்.

எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேனை பற்றி இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் இயக்குனர் க்ளேர் கார்னே கூறியதாவது,

 

அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். கிரிக்கெட் மட்டுமில்லாமல் கோல்ஃப் விளையாட்டும் நன்றாக ஆடத் தெரிந்தவர் அவர். 19 வயதில் இங்கிலாந்து அணிக்காக நாங்கள் இருவரும் கொல்கத்தாவில் களம் இறங்கினோம்.

இங்கிலாந்து கிரிக்கெட் சார்பாக அவருக்கு ஆழந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம். எனக் கூறினார்.

Editor:

This website uses cookies.