தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் வீசிய இந்திய ஆல் ரவுண்டர் மரணம்! ரசிகர்கள் கவலை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பாபு நட்கர்னி நேற்று மும்பையில் மரணம் அடைந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான மராட்டியத்தை சேர்ந்த பாபு நட்கர்னி நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. வயோதிகம் காரணமாக உயிரிழந்த பாபு நட்கர்னிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

41 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அவர் 88 விக்கெட் வீழ்த்தியதோடு 1,414 ரன்களும் எடுத்துள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான பாபு நட்கர்னி சிக்கனமாக பந்து வீசுவதில் கில்லாடியாக விளங்கினார்.

1964-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார். அந்த இன்னிங்சில் அவர் 32 ஓவர்கள் பந்து வீசி 27 மெய்டனுடன் வெறும் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் எடுக்கவில்லை.

1964ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 21 மெய்டன் ஓவர்களை தொடர்ச்சியாக வீசி இதுவரை யாரும் செய்யாத சாதனைக்குச் சொந்தக்காரர் பாபு நட்கர்னி. 32 ஓவர்கள் 27 மெய்டன் 5 ரன்கள், விக்கெட் இல்லை இது உலக அளவில் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாக இன்று வரை திகழ்கிறது.

அதே போல் 1960-61 பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஒரு இன்னிங்ஸில் கான்பூரில் 32 ஓவர் 24 மெய்டன் 23 ரன்கள் என்று அசத்தினார். இந்த டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து டெல்லியில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக 34 ஓவர் 24 மெய்டன் 24 ரன்கள் ஒரு விக்கெட்.

வலைப்பயிற்சியில் குட் லெந்த் பகுதியில் காசு ஒன்றை வைத்து அந்த இடத்தில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வீசிக்கொண்டிருப்பாராம் பாபு நட்கர்னி. பேட்டிங்கில் 1,414 ரன்களை எடுத்த நட்கர்னி இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் எடுத்தார், 7 அரைசதங்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 விக்கெட்டுகளை எடுத்த மெய்டன் புகழ் நட்கர்னி 191 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 40 ரன்கள். 14 சதங்களை எடுத்துள்ளார்.

1967-68-ல் நியூசிலாந்து தொடரில் இவர் வெலிங்டனில் எடுத்த 6/43 பவுலிங்கினால் இந்திய அணி ஒரு அரிய வெற்றியை அயல் மண்ணில் ஈட்டியது.

முன்னாள் கிரிக்கெட்  வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின், விவிஎஸ் லக்‌ஷமன் ஆகிய வீரர்கள் பபு நட்கர்னியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

Sathish Kumar:

This website uses cookies.