முன்னாள் இந்திய வீரர் ஜேக்கப் மார்டின் வாகன விபத்து காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வாகனத்தை சென்றுகொண்டிருந்த போது இவருக்கு வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு தலையில் பலமான அடி பட்டுள்ளது. தற்போது அவர் காயத்திற்கும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காயம் மற்றும் அதன் வீரியம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
தற்போது ஓரளவிற்கு நலமாக உள்ளார் என்று தெரிகிறது. இதனை இந்திய வீரர் யூசுப் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏனெனில் ஜேக்கப் மார்ட்டின் ஆனால் அணியின் வீரராகவும் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். தற்போது அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மார்டின் மார்டின் இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளிலும் 1999 முதல் 2001 வரை இந்திய அணிக்காக ஆடியுள்ளார். குறுகிய காலமே ஆடினாலும் அவர் ஆட்டத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளார். மொத்தம் 10 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 158 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அதன் சராசரி 22.5 அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக அவர் பெரிதாக ஏதும் சாதிக்க வில்லை. ஆனால் தனது உள்ளூர் அணியான பரோடா அணிக்காக பெரும் பங்காற்றியுள்ளார். மொத்தம் 138 போட்டிகளில் முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும் ரயில்வே அணிக்காகவும் ஆடியுள்ளார் .முதல்தர போட்டிகளில் அவர் 9 ஆயிரத்து 192 ரன்கள் விளாசி உள்ளார்.
அதன் சராசரி 46.6 ஆகும் அதன் பின்னர் தான் 2009ஆம் ஆண்டு முதல் தர போட்டியில் இருக்கும். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் அணிக்காக பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2016 மற்றும் 17 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் அவரோட அணிக்காக கேப்டனாக இருந்துள்ளார்.