சற்று முன்: இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர்! கிட்டத்தட்ட உறுதி!! ரசிகர்கள் ஜாலி!

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் விக்ரம் ரத்தோர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 50 வயதான இவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் வரும் இந்திய வீரர்களை தயார் செய்து வருகிறார். இந்தியாவிற்கு துவக்க வீரராக ஆடியுள்ள அவர் 6 டெஸ்ட் போட்டியில் மட்டும் 7 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் ஜாம்பவானாக திகழ்ந்த இவர் 15 சீசன்கள் ஆடியுள்ளார். அவற்றில் 146 முதல் தர போட்டியில் ஆடியவர் 11,473 ரன்கள் குவித்துள்ளார். 99 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார் 3161 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேச ரஞ்சி கோப்பை அணிகளுக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தேசிய இந்திய சீனியர் வீரர்களின் தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டு உள்ளார். தற்போது சஞ்சய் பங்கர் இந்தியாவின் துணை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். அவரது பதவி கிட்டத்தட்ட விக்ரம் ரத்தோருக்கு வந்து விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான இறுதிக் கட்ட நேர்காணலுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை தொடருடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைந்தது. அடுத்த பயிற்சியாளர் தேர்வு செய்யும் வரை, அவருக்கு 45 நாட்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது பி.சி.சி.ஐ. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 6 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள, மூவர் இந்தியர்கள், மூவர் வெளிநாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள்.

ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புட், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஃபில் சிம்மன்ஸ், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளருமான டாம் மூடி, ஆகியோர் இந்த பயிற்சியாளர் பதவிக்கான இறுதிப் போட்டியில் உள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்தவரே பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், ரவி சாஸ்திரி தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பது சரியா என்ற ரீதியில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது போல கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் சூசகமாக பேட்டியளித்தார். கேப்டனின் ஆதரவு இருப்பதால், ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகமே.

வெள்ளிக்கிழமையன்று கபில் தேவ் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய தேர்வுக் குழு, நேர்காணலை நடத்தி பயிற்சியாளரை தேர்வு செய்ய இருக்கின்றனர்.

ஆனால், ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sathish Kumar:

This website uses cookies.