ஊழல் புகார் விசாரணைக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அபிமன்யூ மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிரிமீயர் லீக் டி-20 போட்டிகள் நடந்து வருகின்றன. இதேபோல கர்நாடகாவிலும் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பிரிமீயர் லீக் போட்டியில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சில கர்நாடக வீரர்கள் மீது புகார் எழுந்தது. இதை விசாரித்து வந்த கிரைம் பிரிவு போலீசார், பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அஸ்பக் தாரா, கிரிக்கெட் வீரர்கள் ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், கடந்த புதன்கிழமை, மேட்ச் பிக்சிங்-குக்கு தூண்டியதாக பெண் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கர்நாடகவைச் சேர்ந்த, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அபிமன்யூ மிதுனுக்கும் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதை மாநில குற்றப்பிரிவின் இணை ஆணையர் சந்தீப் பட்டீல் உறுதி செய்தார். ’’மிதுன் குறித்த புகாரை விசாரிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணிக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்’’ என்றார். கர்நாடக பிரிமீயர் லீக் மேட்ச் பிக்சிங் வழக்கில், சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபிமன்யூ மிதுன், இந்தியாவுக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும் 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை தொடா்ச்சியாக இன்னிங்ஸ் வெற்றிகளின் மூலம் முழுமையாகக் கைப்பற்றியது இந்திய அணி. பேட்ஸ்மேன்கள் உள்பட அனைத்து வீரா்களும் சிறப்பாக செயல்பட்டாலும், இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளா்களின் பங்களிப்பு முக்கிய காரணம் என்றால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிலும் நமது வேகப்பந்து வீச்சாளா்கள் சொந்த மண்ணில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனா்.
ஒரு காலத்தில் கத்துக்குட்டி அணியாக இருந்த வங்கதேசம், தற்போது தனக்கு எதிராக விளையாடும் அணிக்கு கடுமையான சவாலை அளித்து வருகிறது.
எந்த நாட்டு அணியாக இருந்தாலும் கொஞ்சம் கவனம் சிதறினாலும் அந்த ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றிபெற்றுவிடும் என்பதால் கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.
மூன்று டி20, 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதற்காக இம்மாத தொடக்கத்தில் நமது நாட்டுக்கு வங்கதேச அணி வந்திருந்தது.
இம்மாதம் 3-ஆம் தேதி, தலைநகா் தில்லியில் நடைபெற்ற முதலாவது 20 ஓவா் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ரசிகா்களுக்கு அதிா்ச்சியை கொடுத்தது வங்கதேசம்.