ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பாடம் எடுக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்க இந்திய அணியின் முன்னாள் வீரர் ரமேஷ் பவாருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரமேஷ் பவார் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த சில வருடங்களாக உள்ளூர் அணிகள் சிலவற்றின் பந்து விச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். லெக் ஸ்பின் பந்துவீச்ச்சாளரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மும்பை கிரிக்கெட் வாரியத்தில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்க ரமேஷ் பவாருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்றுள்ள ரமேஷ் பவாரும் இதற்காக வரும் ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரமேஷ் பவார், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், இதற்கு தன்னை முன்மொழிந்த கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுக்கும் ரமேஷ் பவார் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரமேஷ் பவார் கூறியதாவது, “எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதே போல் இதற்காக எனது பெயரை பரிந்துரைத்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் கிரேக் சேப்பல் மற்றும் ட்ராய் கூர்லே ஆகியோருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன் அவர்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.