ரிஷப் பண்டிர்க்கு பதில் இந்த வீரரை தான் இந்திய அணி தேர்ந்தெடுக்க வேண்டும்; இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர் !!

ரிஷப் பண்டிர்க்கு பதில் இந்த வீரரை தான் இந்திய அணி தேர்ந்தெடுக்க வேண்டும்; இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர்..

ரிஷப் பண்டிர்க்கு பதில் இந்த வீரரை தான் இந்திய அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என சபாக் கரீம் தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் உள்ளாகிய ரிஷப் பண்ட் உயிர்சேதத்திலிருந்து தப்பித்தாலும், கடுமையான காயங்களால் அவதிப்பட்டு வருவதால் அவர் விளையாடுவதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் ரிஷப் பண்ட், 2023 உலகக் கோப்பை தொடரில் பங்கு பெறுவாரா என்பது கூட தெரியாமல் உள்ளது.

இதனால் இவருக்கு பதில் மாற்று வீரராக இந்திய அணி யாரை தேர்வு செய்யப் போகிறது என்ற குழப்பத்தில் உள்ளது. குறிப்பாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக செயல்பட இஷான் கிஷன், கே எல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளின் ரிஷப் பண்ட் போன்ற அதிரடியாக செயல்படக்கூடிய ஒரு வீரரை, இந்திய அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணிக்கு தேவையான தங்களுடைய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி குறித்து வெளிப்படையான கருத்துக்களை பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபாக் கரீம், அதிரடி வீரர் ரிஷப் பண்டிற்கு பதில் இந்திய அணிக்கு தகுதியான வீரர் யார் என்பது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், “இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எஸ் பரத்தை தயார் செய்ய வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் என்னை பொருத்தவரையில் ரிஷப் பண்டிற்கு பதில் தகுதியான வீரராக நான் இஷான் கிஷனை தான் சொல்வேன், ஏனென்றால் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடுவதைப் போல் இஷான் கிஷன் ரஞ்சிக்கோப்பையில் அதிரடியாக செயல்பட்டு சதத்தை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இருந்த போது நாம் பல வெற்றிகளை பெற்றுள்ளோம். இது அவர் அணியில் இருந்ததால் கிடையாது வேகமாக ரண்களை குவித்ததால் மற்றும் பண்ட் அணியில் இருக்கும் பொழுது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார். இஷான் கிஷன் சர்வதேச இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வில்லை என்பது தெரியும் ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளில் மிக சிறந்த முறையில் ரெட் பால் கிரிக்கெட் விளையாடியுள்ளார்” என்று சபாக் கரீம் தெரிவித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடவுள்ளதால், இந்திய அணி யாரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக தேர்ந்தெடுக்கும் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mohamed:

This website uses cookies.