இந்திய அணியின் முன்னாள் மற்றும் முதல் கேப்டனுமான அஜித் வதேக்கர் 77 வயதில் காலமானார்.
அஜித் வதேக்கர் 1971-ல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்தில் வரலாற்று வெற்றிகளுக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்ற கேப்டன் ஆவர். இவர் மிகவும் ஆக்ரோஷமான இடது கை பேட்ஸ்மேன்.
1958-59ல் தனது முதல்-வகுப்பு அறிமுகத்தை வதேக்கர் செய்தார், ஆனால் 1966-67 இல் இந்தியாவுக்கு விளையாடும் முன் எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தியாவுக்கு 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
37 போட்டிகளில் 71 இன்னிங்ஸ் ஆடியுள்ள இவர் 1 சதம் மற்றும் 14 அரைசதங்களை அடித்திருந்தார். இவர் மொத்தம் 2113 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 143 ரன்கள் எடுத்திருந்தார். இவரது சராசரி 31.07.
மேலும், இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் ஒரு அரைசத்துடன் சேர்த்து மொத்தம் 73 ரன்கள் எடுத்துள்ளார். அதில் இவரது சராசரி 37.
இங்கிலாந்து மண்ணில் அவர்களை வீழ்த்தி தொடரை வென்று தந்த கேப்டன் என்கின்ற பெருமை இன்றளவும் இவருக்கு உண்டு. இதை எவராலும் அளிக்க முடியாது.
அவர் இந்திய அணியில் தன்னை தனித்து காட்டிக்கொள்ள சிறப்பாக செயல்பட்டார். இவர் அணியில் இருந்த ஏழு ஆண்டுகள் இந்திய அணியின் பேட்டிங் ஒரு இமாலய வலிமை பெற்றிருந்தது. இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் சிறந்த 3 பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், சிறந்த ஸ்லிப் பீல்டர்களில் ஒருவராகவும் இருந்தார்.
பேட்டிங்கில் மட்டுமல்ல, கேப்டன் பொறுப்பிலும் இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.
மும்பை பேட்மிண்டன் அணியின் சொந்தகாரராகவும் இருந்து வந்தார்.
நீண்ட காலமாக நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்த வதேக்கர், பல மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இன்று இரவு சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார்.
77வது வயதில் காலமான இவருக்கு பல அக்கால, இக்கால வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதே சமயம் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.