மருத்துவமனையில் மாரடைப்பால் அவதிப்பட்டு கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் இடது கை அதிரடி வீரர் 75 வயதாகும் ஏ.ஜி மில்கா சிங் வெள்ளிக்கிழமை அன்று 75 இயற்கை எய்தினார்.
ஏ.ஜி மில்கா சிங்கின் குடும்பமே விளையாட்டு குடும்பம் ஆகும். அவரது தந்தை ஏஜி ராம் சிங், அவரது சகோதரர் ஏஜி கிர்பால் சிங் ஆகியோர் தமிழக அணிக்காக முதல்-நிலை போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். அவரது சகோதரர் ஏஜி கிர்பால் சிங் இந்திய அணிக்காகவும் விளையாடி உள்ளார்.
மில்கா சிங் இந்திய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில், 1959/60 இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணிக்கு அவர் அறிமுகம் ஆனார். 1961/62 இல் பாகிஸ்தானுக்கு ஒரு முறை சென்று விளையாடி உள்ளார், அதே வருடத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாடி உள்ளார். அந்த இங்கிலாந்து போட்டியின் போது, தனது சகோதரர் கிர்பால் சிங்குடன் அவர் விளையாடினார். இரண்டு சகோதரர்கள் ஒன்றாக விளையாடியது அப்போது ஒன்று தான்.
அவரது காலத்தில் அதிரடியாக விளையாடும் மில்கா சிங், அட்டகாசமாக பீல்டிங்கும் செய்வார். தனது 18வது பிறந்தநாள் அன்று இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார் மில்கா சிங்.
அற்புதமாக விளையாடிய மில்கா சிங் ரஞ்சி டிராபியில் தமிழக அணிக்காக 2000 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறார் மற்றும் முதல் நிலை கிரிக்கெட் போட்டிகளில் 8 சதங்களுடன் 4000 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறார். 20 வயதை அடைவதற்கு முன்பே இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை விளையாடிவிட்டார். அதன் பிறகு அவர் வங்கியில் பணிபுரிந்தார்.
அவரது சகோதரர் கிர்பால் சிங் இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்தார். கிர்பால் சிங்கின் மகன் அர்ஜன் கிர்பால் சிங் தமிழக அணிக்காக விளையாடியுள்ளார் அதுமட்டும் இல்லாமல் மறக்கமுடியாது 300 ரன்னும் அடித்து இருக்கிறார்.
முன்னாள் இந்திய வீரர் ஏஜி மில்கா சிங் மரணம் அடைந்ததை அடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்தார் பிஷான் பேடி.