2013ல் இந்திய அணி இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபியை தோனி தலைமையில் வென்றது இந்திய அணி, அப்போது இந்திய அணியின் உடற்பயிற்சி பயிற்றுனராக இருந்த ராம்ஜி ஸ்ரீநிவாசன், சச்சின், சேவாக், ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் பாடி வெய்ட் பயிற்சிகளில் அவ்வளவாக ஈடுபட மாட்டார்கள், நல்ல ஒர்க் அவுட் செய்வார்கள் ஆனால் வெய்ட் லிஃபிங் போன்ற உடலை முறுக்கேற்றும் பயிற்சிகளில் இவர்களுக்கு நாட்டமிருந்ததில்லை என்கிறார்.
ஐஏஎன்எஸ், செய்தி ஏஜென்சிக்கு அவர் கூறியதாவது: “வீட்டிலேயே நாம் ஃபிட்னெஸ் லெவலை பிரமாதமாக பராமரிக்க முடியும். உங்கள் உடல் எதைச் செய்தால் நன்றாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் வீரர்கள் உடலை முறுகேற்றும் அதி பாடி வெய்ட் பயிற்சிகளில் ஈடுபடும் பித்தம் ஏனென்று எனக்கு புரியவில்லை, இது தடகள வீரர்களுக்குச் சரிப்பட்டு வரும் ஆனால் ஹெவி வெய்ட் பயிற்சிகள் மட்டுமே பயிற்சி என்பதாகாது.
இந்திய அணியில் சில பிரமாதமான கிரிக்கெட் வீரர்கள் இருந்த காலக்கட்டத்தில் நான் பயிற்றுனராக இருந்த அனுபவம் மறக்க முடியாதது. இவர்களில் சிலர் தங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதை நன்றாக அறிந்திருந்தனர்.
சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, தோஇ ஆகியோர் ஓவர் வெய்ட் பயிற்சி மீதான பித்தம் கொண்டவர்கள் அல்லர். அவர்கள் ஜிம்முக்கு ரெகுலராக வருபவர்கள்தான், ஆனால் ஹெவி வெய்ட் போட மாட்டார்கள். சச்சின் தன் மணிக்கட்டுகளுக்கும் தோள்பட்டைக்கும் பயிற்சி எடுப்பார். தோனி ஒரு தனி ரகம். அவர் மிகவும் இயல்பாகவே உடல் தகுதி உடையவர். அவரது பணிச்சுமைக்கு விரல்களில் கூட அவருக்கு அடிப்பட்டதில்லை.
ஆனால் மற்றவர்களைப் பற்றி கூறினால் சேவாக் உடற்பயிற்சியில் மிகவும் சாதுரியமானவர் தனக்கு தேவை என்னவென்பதை மட்டும் செய்வார். அதாவது உடல் வலுவுக்கு அனைத்து அடிப்படைப் பயிற்சிகளையும் மேற்கொள்வார், அதே போல் ரோஹித் சர்மா சிக்சர்களை பார்த்திருப்பீர்கள், யுவராஜ் சிங் போல் இவரும் நீண்ட தூரம் சிக்சர்களை அடிப்பார். ஆனால் இவர் கூட ஜிம்மில் ஹெவி வெய்ட் பயிற்சி செய்ய மாட்டார்.
ஜாகீர் கானுக்கு அவரது உடலின் ஒவ்வொரு தசையும் தெரியும். பின் முதுகும் தொடைப்பின் பகுதி தசை பிரச்சினை வராதவாறு பயிற்சி செய்வார்.
ஆனால் இப்போதைய அணியில் ரவீந்திர ஜடேஜா அவருக்கு ஜிம் என்பது வெறும் அடிப்படை பயிற்சிதான் அவர் ஓடுவார், நடப்பார், த்ரோ செய்து பயிற்சி எடுப்பர், ஜட்டு இன்னொரு சரியான உதாரணம், ஹெவி வெய்ட் செய்வதில் தவறில்லை, ஆனால் ஒரு சிறு தவறும் உங்களை கொஞ்ச காலத்துக்கு ஆட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்து விடும்” என்றார் ராம்ஜி ஸ்ரீநிவாசன்.