புதிய கிரிக்கெட் அணியை விலை கொடுத்து வாங்கினார் கொச்சி  டஸ்கர்ஸ் உரிமையாளர் !!

புதிய கிரிக்கெட் அணியை விலை கொடுத்து வாங்கினார் கொச்சி  டஸ்கர்ஸ் உரிமையாளர்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐ.பி.எல் தொடரில் விளையாடிய கொச்சி டஸ்கர்ஸ் அணியின் உரிமையாளரான முகேஷ் பட்டேல், மும்பையில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் புதிய அணி ஒன்றை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தொடரில் கேராளவை மையமாக கொண்டு, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என்ற புதிய அணி ஒன்று  உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த அணி ஒரு தொடரில் மட்டுமே விளையாடியது அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் மும்பை கிரிக்கெட் வாரியத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க புதிய கிரிக்கெட் அணி ஒன்றை கொச்சி டஸ்கர்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளரும் தொழிலதிபருமான முகேஷ் பட்டேல் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

மும்பை கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட உள்ள இந்த தொடர் மார்ச் 11ம் தேதி துவங்கி மார்ச் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகள்;

மும்பை வடக்கு, மும்பை வட கிழக்கு, மும்பை கிழக்கு, மும்பை செண்ட்ரல், மும்பை நார்த் செண்ட்ரல், மும்பை சவுத் செண்ட்ரல், மும்பை சவுத்.

Mohamed:

This website uses cookies.