முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹிரா ஜெயராம் இயற்கை எய்தினார்!!
தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹிரா ஜெயராம் நேற்று தென்னாப்பிரிக்காவில் இயற்கை எய்தினார். இரு ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவருடைய குடும்பம் கடந்த 1942ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்கா சென்றது.
அதன்பின்னர் தென்னாப்பிரிக்க மண்ணில் குடி சேர்ந்த அவர், முதலில் ஜோகனஸ்பெர்க்கில் தங்கி இருந்தார். பின்னர் தென்னாப்பிரிக்க நாட்டின் குடியுரிமை சட்டத்தின் கீழ் வேறு நகருக்கு குடி பெயர்ந்து வாழ்ந்தார்.
என்ன இருந்தாலும் அவர் இந்திய ரத்தம் அல்லவா, அவருக்கு கிரிக்கெட்டை பார்த்தவுடன் பிடித்து ஆட துவங்கினார். அந்த நாட்டின் தனது மாநில அணிக்காக ஆடினார். மற்றும் நாட்டின் பல கிளப் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
தனது மாநில அணிக்காக 8 ஓவர்கள் வீசி 2 ரன் மட்டுமே கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடவில்லை என்றாலும் உள்ளூர் போட்டிகளில் ஜாம்பவனாக திகழ்ந்துள்ளார்.
அவரது மரணம் குறித்து அறிந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய செயலர் இரங்கல் தெரிவுத்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்.