போதை பொருள் கடத்தியதாக முன்னாள் ரஞ்சி வீரர் கைது!
கிரிக்கெட் வீரர்கள் பலர் நாம் மிகவும் வசதியுடனும் பணக்காரர்களாகவும் இருப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம். நம் கண் முன்னர் கூட பார்த்துக்கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் வீரர்கள் நமக்கு தெரிந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஓரளவிற்கு வசதி படைத்தவர்களாகவும் பணத்திற்கு பிரச்சனை இல்லாமல் இருப்பவர்கள் உள்ளனர்.
ஆனால் கிரிக்கெட் கனவு இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடமுடியாமல் சென்று பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. பலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். பலர் தங்களுக்கு கிடைத்த எந்த ஒரு சிறிய வேலையும் செய்து தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர்.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டுனராக வேலை பார்ப்பது நமக்கு தெரிந்த விஷயமே. பல கிரிக்கெட் வீரர்கள் வேறு வழியின்றி நடுவராகவோ அல்லது போட்டியின் ஆடுகள பராமரிப்பாளர் ஆகவும் மாறிவிடுகின்றனர்.
சர்வதேச வீரர்களுக்கு இப்படி ஒரு நிலைமை என்றால் உள்ளூர் போட்டிகளில் ஆடி வாய்ப்பு கிடைக்காமல் வேறு தொழில் செய்ய முடியாமலிருக்கும் வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். அப்படியாக தற்போது இந்தியாவில் அசாம் மாநிலத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் ஆடிய முஜாமில் ஹக் என்னும் முன்னாள் வீரர் ஒருவர் போதைப் பொருள் கடத்தியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வாழ்க்கை கடுமையாக திசை மாறியுள்ள. ரஞ்சி கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் ஓரளவிற்கு ஆடி அந்த அணிக்காக இருந்து வந்தவர். வயதான பின்னர் கிரிக்கெட் ஆட முடியாமல் கிரிக்கெட் தொழிலை விட்டு வெளியேறி வேறு தொழில் செய்ய தேடி வந்துள்ளார். ஆனால் எதுவுமே கிடைக்காமல் போதை பொருள் கடத்தும் தொழிலில் இறங்கி உள்ளார்.
சட்டத்திற்கு விரோதமாக ஹெரோயின் போன்ற போதைப் பொருளை கடத்துவது அவரது முழுநேர தொழிலாகவே மாற்றியிருந்தார். தற்போது அசாம் மாநில போலீசார் அவரை கைது செய்துள்ளனர். நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் அவருக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து 120 பாட்டில் போதை மருந்துகள் 12,500 ரூபாய் பணம் 200 போதை மாத்திரைகள் 28 கிராம் ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் போலீஸ் விசாரணையில் உள்ளா.ர் இவருடன் சேர்த்து மற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் தற்போது கைது செய்யப்படுவதில் முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக பலமுறை இவ்வாறு போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.