இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் ஆலோசகராக செயல்பட போகும் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் !
இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகளில் விளையாடப் போகிறது. இந்த வருடம் முடிந்த பின்னர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இலங்கைக்கு செல்கிறார்.
அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடுவதற்காக திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரானா வைரஸ் தொற்று காலத்திற்கு முன்னர் இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி கொண்டிருந்தது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு பயிற்சி போட்டோம் எப்படியோ அது சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அந்த தருணத்தில்தான் கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவது ஏற்பட்டது. அந்த நேரத்தில் இங்கிலாந்து அணி வீரர்களால் இலங்கையில் தங்கியிருந்து விளையாட முடியவில்லை. இதன் காரணமாக அந்த தொடர் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜனவரி மாதம் அந்த பழைய தொடரை மெய்ப்பிக்கும் வகையில் நடைபெறப்போகிறது.
ஜனவரி 14ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்கிய ஜனவரி 26 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிகிறது. இதன் பிறகுதான் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 4 டெஸ்ட் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்நிலையில் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து பேட்டிங் ஆலோசகராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக இலங்கை தொடருக்கு மட்டும் தான் இவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. இந்தியாவில் விளையாட போகும் இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் ஆலோசகராக நீடிப்பாரா என்பது குறித்த செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மைதானங்களில் 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜாக் காலிஸ் 8 சதங்களை அடித்து இருக்கிறார். இதன் காரணமாக பந்துவீச்சை எளிதாக கையாளலாம் என்ற நோக்கத்துடனும் அவரிடம் இருக்கும் அனுபவங்களை இங்கிலாந்து அணிக்கு கற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் அவருக்கு பேட்டிங் ஆலோசகர் பதவியைக் கொடுத்து இருக்கிறது.