ஐ.பி.எல் மற்றும் ரஞ்சி போட்டிகளில் வாய்ப்பு வாங்கி தருவதாக இளம் வீரர்களை ஏமாற்றிய முன்னாள் வீரர் கைது

ஐ.பி.எல் மற்றும் ரஞ்சி போட்டிகளில் வாய்ப்பு வாங்கி தருவதாக இளம் வீரர்களை ஏமாற்றிய முன்னாள் வீரர் கைது

ரஞ்சிக்கோப்பை மற்றும் ஐ.பி.எல் போன்ற தொடர்களில் விளையாட வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக இளம் வீரர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்து முன்னாள் அண்டர்-19 வீரர் ரவிந்த்ர வடேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஓரி வருடத்தில் மட்டும் இளம் வீரர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்படுவது இது நான்காவது சம்பவம் ஆகும். தற்போது 23 வயதான ரவீந்திர வடேகர் ஹைதராபாத் அண்டர்-19 அணிக்காக ஆடியுள்ளார்.

மேலும், சன்ரைசர்ஸ் அணியில் சில இடங்களில் தொடர்பு வைத்துள்ளார் வடேகர். அதேபோல் ஹைதராபாத்தில் ஒரு கிரிக்கெட் கிளப் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் விளையாடும் இளம் வீரர்களுக்கு தந்து அதிகாரத்தை பயன்படுத்தி ரஞ்சி கோப்பை தொடர் மற்றும் ஐ.பி.எல் தொடரில் ஆட வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றி கிட்டத்தட்ட ₹ 67 லட்சம் மோசடி செய்துள்ளார்.

மேலும், பல வீரர்களுடன் எடுத்த புகைப்படங்களை வைத்து தனது கிரிக்கெட் க்ளப்பிற்கு வரும் இளம் வீரகளை ஆசை வார்த்தை கூறி பணம் பரித்துள்ளான். இவனுடைய உதவியாளர்கள் விஜய் பாராட்டே (43), ஜீவன் முக்கடம் (28), தினேஷ் மோர் (23) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளானர்.

Editor:

This website uses cookies.