தோனி ஏன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க கூடாது; 4 காரணங்கள் இதோ!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் அரங்கில் முதலில் கால் வைத்தது 2005ம் ஆண்டு. அதன்பிறகு 9 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடிவிட்டு, யாரும் எதிர்பாராத விதமாக 2014ம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தார்.

அன்றிலிருந்து இந்திய அணிக்கு ஒரு நல்ல தலைவனை தோனிக்கு மாற்றாக தேடி வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆனால், அதற்க்கான விடை கிடைத்த பாடில்லை.

தோனி ஏன் ஓய்வு பெற்றிருக்க கூடாது என்பதை தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.

1. கேப்டன் பொறுப்பு:

ராஞ்சி வீரர் தோனி, இந்தியா இதுவரை கொடுத்துள்ள கேப்டன்களில் மிக சிறந்தவர். 60 டெஸ்ட் போட்டிகளில் 45 சதவீதம் வெற்றியை கொடுத்துள்ளார்.

மேலும் இவரது கேப்டன் பொறுப்பில் தான் இந்திய அணி 2009ம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து.

பல இளம் வீரர்களை வழிநடத்துவதில் காய் தேர்ந்தவர். இவரின் ஆட்ட கணிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மிக நேர்த்தியாக அணியை வழிநடத்துவார்.

2. அனுபவமான வழியில்..

தோனி இந்திய அணியின் விக்கெட் கீபராக 90 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ளார். காயம் காரணமாக ஒரு சில போட்டிகளை தவிர அனைத்து போட்டிகளிலும் ஆடியுள்ளார். இவரது கீப்பிங் அனுபவம் மற்றும் திறமை இதுவரை கண்டிராத அளவிற்க்கு உள்ளது எனவும் அனைவராலும் பாராட்ட பெற்றார்.

3. நிலைத்திருக்கும் பேட்டிங் வரிசை:

தோனி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக திகழவில்லை என்றாலும் இறுதிவரை நின்று போராடக்கூடியவர். தனி ஒருவராக இறுதி வரை தான் தோளில் சுமந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார்.

டெஸ்ட் அரங்கில் அவர் அடித்த 4876 ரன்களில் 4717 ரன்கள் அவர் 6வது 7வது வீரராக இறங்கி அடித்தது தான்.

இதை செய்ய தவறினார் சஹா, அவர் பந்துவீச்சாளர்களுடன் பேட்டிங் செய்ய சற்று தடுமாறுகிறார். அதேபோல், நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

4. விக்கெட் கீப்பிங் திறமை 

இந்திய அணியில் இடம்பெற்ற மிக சிறந்த விக்கெட் கீபர்களுள் முதன்மையானவர் தோனி என்றால் மிகை ஆகாது.  அவரின் மின்னல் வேக ஸ்டம்பிங் என்றார் அவருக்கு இணை அவர் மட்டுமே.

அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரை போல ஸ்டம்பிங் பின்னே அதிசயம் நிகழ்த்த எவராலும் இயலவில்லை.

Vignesh G:

This website uses cookies.