ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேட் ரென்ஷா தற்போது இங்கிலாந்து கவுண்ட்டியில் ஆடி வருகிறார். தற்போது அவருக்கு விறல் முறிவு ஏற்பட்டுள்ளதால் தனது கவுண்ட்டி அணிக்கு இந்த சீசன் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை இன்று அறிவித்துள்ளார் மேட் ரென்ஷா.
22வயதான ரென்ஷா இங்கிலாந்தின் சோமர்செட் கவுண்ட்டி அணிக்காக ஆடி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்ரி அணிக்கு எதிராக ஆடும்போது அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சோமர்செட் அணி தலைமை பயிற்சியாளர் ஜேசன் கெர் கூறியதாவது ,
அவருக்கு மேல் விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளரிடம் பேசிய பிறகு முடிவு எடுக்கப்படும் . தற்போது அவர் ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடம் பிடிக்க தயாராகிவிட்டார். சோமர்செட்டில் இந்த வருடம் இனி ஆடமாட்டார்.
என கூறினார்
மேட் ரென்ஸா முதலில் மற்றோரு ஆஸ்திரேலிய வீரர் கேம்ரான் பேன்கிராப்ட்டிற்கு பதிலாக சோமர்செட்டில் இடம்பிடித்தார் . ஏனெனில் அவர் பால் டெம்பரிங் சர்ச்சையில் சிக்கி ஒரு வருடம் கிரிக்கெட் ஆட தடை செய்யப்பட்டார். அதன்காரணமாக மேட் ரென்ஷா தேர்வு செய்யப்பட்டார்.
மாற்று வீரராக வந்தாலும் கவுண்ட்டி தொடரில் 513 ரன்கள் குவித்துள்ளார் . இதன் சராசரி 51.30 ஆகும். மேலும் ராயல் லண்டன் ஒருநாள் போட்டி தொடரில் 6 போட்டிகளில் 180 ரன் அடித்துள்ளார்.
தற்போது இவரது இழப்பு சோமர்செட் அணிக்கு பெருத்த பின்னடைவாக அமையும் .