அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை (அதிகபட்சம் 4 வீரர்கள்) தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டிய காட்டாயத்தை சந்தித்தது.
வேறு வழியில்லாததால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்தது. இதில் வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட், ருத்துராஜ் கெய்க்வாட், முகமது சிராஜ் போன்ற இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு தங்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டிருந்தாலும், ஐபிஎல் வரலாற்றின் ஜாம்பவான்களாக திகழ்ந்து வரும் ரசீத் கான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ, ஹர்திக் பாண்டியா, குவின்டன் டிகாக் போன்ற சீனியர் வீரர்கள் பலர் தங்களது அணிகளில் இருந்து கழட்டிவிடப்பட்டனர்.
இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் தங்களது அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று யோசித்து வருகிறது.
இதனால் கீழ்கண்ட இந்த மூன்று வீரர்களில் ஒருவரை இந்த இரண்டு புதிய அணிகளும் கேப்டனாக தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.அப்படிப்பட்ட 3 வீரர்கள் பற்றி காண்போம்.
கே எல் ராகுல்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் கடந்த மூன்று தொடர்களிலும் மிக சிறந்த முறையில் பேட்டிங் செய்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி அனைவர் மனதிலும் நன்மதிப்பை பெற்றார். இருந்தபோதும் பஞ்சாப் கிங்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அவரை தனது அணியில் தக்க வைக்க வில்லை.
அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடிய திறமை படைத்த கே எல் ராகுல் அணியை திறம்பட வழி நடத்துவதிலும் அனுபவம் வாய்ந்திருப்பதால் புதிதாக இணைய உள்ள இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு கேப்டனாக சேருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.