விராட் கோலி இல்லாத நேரத்தில் அந்த இடத்திற்கான போட்டி போடும் நான்கு இளம் வீரர்கள்!
நவம்பர் 27ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்க போகிறது. இதற்காக இரு அணிகளும் சிட்னி மைதானத்தில் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். அதன் பின்னர் டிசம்பர் 27-ஆம் தேதி டெஸ்ட் தொடர் துவங்கி ஜனவரி மாதம் இறுதி வரை 4 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும். பிரச்சினை என்னவென்றால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் முடிவடைந்தவுடன் இந்தியாவிற்கு திரும்பி விடுவார். இந்தியாவில் அவருக்கு முதல் குழந்தை பிறக்கப்போகிறது. இதன் காரணமாக குடும்பத்துடன் இருக்கப் போவதாக அறிவித்து விட்டு முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த உடன் இந்தியாவிற்கு திரும்பி விடுவார் இந்நிலையில் அவர் சென்ற பின்னர் அவருக்கு மாற்றாக அந்த இடத்தில் களம் இறங்க வாய்ப்பு இருக்கும் நான்கு வீரர்களை பற்றி பார்ப்போம்.
ஹனுமா விஹாரி
இவர் ஏற்கனவே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார் இங்கிலாந்து மைதானத்திலும் ஆஸ்திரேலிய மைதானத்திலும் ஓரளவிற்கு நன்றாக விளையாடி இருக்கிறார். அவருக்கு அந்த இடம் கிடைக்கலாம் ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் ஆயிரக்கணக்கில் ரன்களை குவித்து வைத்திருக்கிறார். இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் ஓரளவிற்கு நன்றாக ஆடலாம்.
சுப்மன் கில்
தற்போது இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களில் இவர் மட்டும் தான் தற்போது வரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடியதில்லை. உள்ளூர் போட்டிகளில் 2133 ரன்கள் அடித்து இருக்கிறார். இதன் சராசரி 73 ஆகும் அதிகபட்சமாக 268 ரன்கள் அடித்து இருக்கிறார் இவருக்கும் அந்த இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கேஎல் ராகுல்
இந்திய அணிக்காக ஏற்கனவே 39 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டார். கேஎல் ராகுல் தொடக்க வீரராக விளையாடிக்கொண்டிருந்த இவருக்கு இந்த இடம் சற்று பொய்யாகத்தான் இருக்கும் பல மாதங்கள் கழித்து மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருப்பதால் எந்த இடம் கிடைத்தாலும் நன்றாக ஆட தயாராக தான் இருப்பார் கே எல் ராகுல்.
ரோகித் சர்மா
பல ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வரும் ரோகித் சர்மா தற்போது விராட் கோலி இல்லாத நேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கிறார். இவரும் அந்த இடத்தில் ஆட வாய்ப்பு இருக்கிறது.