2017ஆம் ஆண்டு இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய அற்புதமான ஆண்டாக அமைந்தியவிட்டது. 2017ல் விளையாடிய 16 தொடர்களில் (டெஸ்ட்+டி20+ஒருநாள்) 14ல் வெற்றி பெற்றும் ஒரு தொடர் (ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 1-1) ட்ராவிலும் முடிந்தது. ஆக மொத்தம் இந்திய அணி தோற்கவே இல்லை.
ஆனால் 2018ஆம் வருடம் அப்படி இருக்குமா என்று சொல்ல முடியாது. ஏனெனில் பரிச்சயம் இல்லாத வெளிநாடுகளில் தொடர் நடக்க உள்ளதால் இதே முடிவு வருமா என்பது சந்தேகம் தான்.
தற்போது 2018ஆம் ஆண்டு இந்திய வீர்ரகள் ஆடவுள்ள அனைத்து போட்டிக்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ
2018ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் ஆடவுள்ள தொடர்கள் :
1.இந்தியாவின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் : ஜனவரி 5 – பிப்ரவரி 24
டெஸ்ட் தொடர்
- முதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி.5, கேப்டவுன், மதியம் 1.30 மணிக்கு
- இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி.13, செஞ்சூரியன்,மதியம் 2.00
- மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி.24, ஜோகனஸ்பெர்க், மதியம் 1.30
ஒருநாள் தொடர்
- முதல் ஒருநாள் போட்டி – பிப்.01, டர்பன், மாலை 5.00 மணிக்கு
- இரண்டாவது ஒருநாள் போட்டி – பிப்.04,செஞ்சூரியன் மதியம் 1.30
- மூன்றாவது ஒருநாள் போட்டி – பிப்.07, கேப் டவுன், மாலை 5.00 மணிக்கு
- நாளாவது ஒருநாள் போட்டி – பிப்.10, ஜோகனஸ்பெர்க், மாலை 5.00
- ஐந்தாவது ஒருநாள் போட்டி – பிப்.13, போர்ட் எலிசபெத், மாலை 5.00
- ஆறாவது ஒருநாள் போட்டி – பிப்.16, செஞ்சூரியன், ம்ச்ஸ்ல்சி 5.00
டி20 தொடர்
- முதல் டி20 போட்டி – பிப்.18, ஜோகனஸ்பெர்க், மாலை 6.00
- இரண்டாவது டி20 போட்டி – பிப்.21, செஞஜூரியன், இரவு 9.30
- மூன்றாவது டி20 போட்டி – பிப்.24, கேப் டவுன், கேப் டவுன், இரவு 9.30
2.நிதாஹஷ் கோப்பை : இந்தியா- வங்கதேசம் – இலங்கை முத்தரப்பு தொடர் – மார்ச் 8 முதல் 20 வரை
தென்னாப்பிரிக்க தொடர் முடிந்ததும் இந்திய அணி இலங்கைக்கு சென்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக முத்தரப்பு தொடரில் ஆடவுள்ளது.
3.இந்தியன் பிரிமியர் லீக் – ஏப்ரல் 4 முதல் மே 31 வரை
இலங்கை அணியுடன் முத்தரப்பு தொடர் முடிந்து சில நாட்கள் ஓய்விற்கு பிறகு ஏப்ரல் மே மாதத்தில் நடக்கும் ஐ.பி.எல்-11ல் ஆடவுள்ளது. இந்த தொடரில் அனைத்து இந்திய வீரகள்ளும் கலந்து கொண்டு விளையாடுவார்கள்.
4.இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் – ஜூலை 1 முதல் செப். 11 வரை
இந்த சுற்றுபயணம் மிக நீண்ட பயணமாக இருக்கும். மொத்தம் 74 நாட்கள் இந்திய அணி இங்கிலாந்தில் தங்கி விளையாடும். 3 ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் 5 டெஸ்ட் என மிக நீண்ட தொடரில் ஆடவுள்ளது இந்திய அணி.
1.முதல் டி10 – ஜூலை.3 – ஓல்ட் ட்ராபோர்ட்
2.இரண்டாவது டி20 – ஜூலை.6 – சோபியா கார்டன்ஸ்
3.மூன்றாவது டி20 – ஜூலை.8 – கவுண்ட்டி யார்ட்
1.முதல் ஒருநாள் போட்டி – ஜூலை.12 – ட்ரெண்ட் பிரிட்ஜ்
2.இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை.14 – லார்ட்ஸ்
3.மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை.17 – ஹெட்டிங்லி
1.முதல் டெஸ்ட் – ஆகஸ்ட் 1-5, எட்ஜ்பாஸ்டன்
2.இரண்டாவது டெஸ்ட் – ஆகஸ்ட் 9-13, லார்ட்ஸ்
3.மூன்றாவது டெஸ்ட் – ஆகஸ்ட் 18-22, ட்ரெண்ட் பிரிட்ஜ்
4.நான்காவது டெஸ்ட் – ஆகஸ்ட் 30 முதல் செப் 03, ரோஸ் பவுல்
5.5வது டெஸ்ட் – செப்.7-11, கென்னிங்டன் ஓவல்.
ஆசிய கோப்பை – செப்டம்பர்
இந்த மிக நீண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்தவுடன். இந்திய அணி ஆசிய கோப்பையில் கலந்து கொள்கிறது. இந்த முறை ஆசிய கோப்பை நடத்த இந்திய அரசு மறுத்துள்ளது. தற்போது வரை அதற்கான எந்த இரு செய்தியும் இல்லை. இதனால் மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான்.
இந்தியாவின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்
ஆசியக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. அங்கு மொத்தம் 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாகிறது.
இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுபயணம்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு பிறகு அப்படியே ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி நவம்பர் முதல் பிப்ரவரி வரை இருக்கும் இந்த தொடர். ஆனால் இன்னும் காண்பாம் செய்ய படவில்லை.